Skip to main content
பள்ளிகள், பகடிவதையை மறைக்கின்றனவா ?

 

இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5,600-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளன !

எனினும், சில பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளியின் நற்பெயரைப் பாதுகாக்கும் நோக்கில், பகடிவதை மற்றும் ஒழுங்கீன சம்பவங்களைப் பதிவு செய்யாமல் இருப்பதால், உண்மையான எண்ணிக்கை, இதைவிட அதிகமாக இருக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் பகடிவதை சம்பவங்களை கையாள்வதில் உள்ள குறைபாடுகளை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என்றும், தற்போதுள்ள விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

----------

பருவமழை காலம் தொடங்கவுள்ளதால், திடீர் வெள்ளம் மற்றும் நீர்ப்பெருக்கு ஏற்படக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது !

அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நீடிக்கும் அக்காலக்கட்டத்தில், குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதனால் மரங்கள் சாய்வதுடன், வலுவற்ற கட்டமைப்புகளும் சேதமடையக்கூடும் என அம்மையம் தெரிவித்துள்ளது.

---------

இதனிடையே, கெடா, பேராக் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான இடங்களில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, Met Malaysia கணித்துள்ளது !

-----------

Johor-ரில், Batu Pahat, Segamat, Kluang மற்றும் மலாக்கா, Negeri Sembilan உட்பட நாட்டின்  29 பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது !

-------

தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய எட்டு முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக Astro உலகம் ஏற்பாட்டில் தொடங்கியுள்ளது இளம் செய்தி வாசிப்பாளர் தேடல்!  

ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்; தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் உண்டு.  

விண்ணப்பத்திற்கும், மேல் விவரங்களுக்கும் Astro ulagam அகப்பக்கத்தை வலம் வாருங்கள். 

RAAGA Aaha Siranta Isai!