Skip to main content

Advertisement

சில விளையாட்டுகளுக்கு மறு ஆய்வு தேவை !

 

நீச்சல், தடகளம், வில்வித்தை மற்றும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்ய, தேசிய விளையாட்டு மன்றம் அழைப்பு விடுத்துள்ளது !

அண்மையில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், அந்த விளையாட்டுகளில் மலேசியா பதக்கம் வெல்லத் தவறியதைத் தொடர்ந்து, அம்மன்றம் மறு ஆய்வு மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியில் இந்த விளையாட்டுகள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், தற்போதைய மறு ஆய்வு மூலம், குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என, MSN தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா பெற்ற சாதனையை ஊக்கமாகக் கொண்டு, அடுத்தாண்டு நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக வேண்டும் என, வீரர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியா, 9 தங்கப் பதக்கங்களை வென்றது.

அது, நிர்ணயிக்கப்பட்ட 6 தங்கப் பதக்க இலக்கைத் தாண்டிய வேளை, கடைசியாக, 2010-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியா, அதே 9 தங்கப் பதக்கங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

---------

செபாங்கில் நேற்று நடைபெற்ற, Bahrain GP பந்தயத்தின் தொடக்கச் சுற்றில், Formula One கார்களின் இயந்திர சக்தி குறைந்ததற்கான தொழில்நுட்பக் கோளாறு குறித்து, அனைத்துலக Automobile சம்மேளனம் விசாரணை நடத்தவுள்ளது !

Lewis Hamilton, Max Verstappen உள்ளிட்ட பல ஓட்டுநர்கள், அந்தக் கோளாறால் பாதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே மழை காரணமாக தாமதமான அப்பந்தயம், அந்தக் கோளாறால் இன்னும் தாமதமானது.

----------

Bournemouth-தின் Alex Scott-டின் நிலைமையை, Real Madrid, கடந்த சில வாரங்களாகவே கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது !

இதனால், Scott-டை ஒப்பந்தம் செய்யும் பந்தயத்தில், Real-லும் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அதே வேளை, அந்த மத்தியதிடலாட்டக்காரரை ஒப்பந்தம் செய்ய Chelsea முந்திக்கொண்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், Liverpool-லும், Arsenal-லும், அந்த வீரரை வளைத்துப்போட அடிபோடுகின்றன.

RAAGA Aaha Siranta Isai!