
தேசிய கால்பந்து அணியின் இடைக்காலப் பயிற்றுநர் Tan Cheng Hoe-வின் எதிர்காலம் தொடர்பான முடிவு, மலேசிய கால்பந்து சங்கத்தின் கையிலே உள்ளது !
ஆசியான் கிண்ணப் காற்பந்தாட்டத்தில், Harimau Malaya-வை மூன்றாவது இடத்துக்குக் கொண்டு சென்ற Cheng Hoe அவ்வாறு கூறினார்.
தேசிய அணிக்குத் தொடர்ந்து பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டால், அதனை ஏற்கத் தாம் என்றும் தயாராக இருப்பதாக Cheng Hoe சொன்னார்.
இதனிடையே, வியட்நாமுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், வீரர்கள் குடும்பமாக ஒன்றிணைந்து செயல்பட்டதே வெற்றிக்குக் காரணம் என்றும் Cheng Hoe தெரிவித்தார்.
முதன்முறையாக நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில், Harimau Malaya அணியின் ஆட்டம் சிறப்பாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
நேற்றைய ஆட்டத்தில் வியட்நாமை 1-0 என வீழ்த்தி, அவ்வணிக்கு எதிரான 12 ஆண்டு கால வெற்றி வறட்சிக்கு Harimau Malaya முடிவு கட்டியது.
அப்போட்டியை மலேசியா தோல்வி இன்றி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த வெற்றி ஒரு முடிவு அல்ல என்றும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட, அணியின் ஆட்டத்திறனை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றும் Cheng Hoe கூறினார்.
----------
SUKMA மற்றும் Para SUKMA போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 203 விளையாட்டு வீரர்களுக்கு, திரங்கானு அரசாங்கம், 1.56 மில்லியன் ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது !
அப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2028-ஆம் ஆண்டு கிளந்தானில் நடைபெறவுள்ள SUKMA போட்டிக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு பெற்ற சிறப்பான பதக்க எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, ஒட்டுமொத்த வெற்றிப் பட்டத்தைக் கைப்பற்றும் இலக்குடன், அம்மாநிலம் தயாராகவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
---------
வார இறுதியில், பிரிமியர் லீக்கில், Manchester City, Liverpool-லை எதிர்கொள்கின்ற நிலையில், Anfield மைதானத்தைச் சுற்றி கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது !
பிரிமியர் லீக்கின் நிதி விதிமுறைகளைப் பலமுறை மீறியதாக City குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Liverpool ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழும் என எதிர்பார்க்கப்படுவதே அதற்குக் காரணம்.
அந்தத் தீர்ப்பு வெளியான பின்னர், City பங்கேற்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.