Skip to main content

Advertisement

F1 மீண்டும் மலேசியா வரக்கூடும்!

 

F1 பந்தையத்தை மீண்டும் மலேசியா ஏற்று நடத்தலாம்!

 

அதற்கான சாத்தியங்கள் குறித்து அரசாங்கம் பேச்சு வார்த்தைகளைத் தொடக்கியிருப்பதாகப், பிரதமர் DSAI தெரிவித்தார்.

 

F1 தலைவர் மற்றும் தலைமை செயல்முறை அதிகாரியுடன் மேல் கட்ட கலந்துரையாடல்கள் கூடிய விரைவில் நடத்தப்படும் என அவர் கூறினார்.

 

என்றாலும், வெறும் தொடக்கக் கட்டத்தில் இருக்கும் இப்பரிந்துரையை நடைமுறை படுத்துவதற்கு முன்னர், செலவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால், இவ்விவகாரத்தில் அவசரம் காட்டப்படாது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 
------

 

மற்றொரு நிலவரத்தில் நேற்று செப்பாங் அனைத்துலக பந்தையளத்தில் நடைபெற்ற Bahrain GP பந்தையத்தில், Red Bull ஓட்டுனர் Max Verstappen வெற்றிப் பெற்றார்.

 

Kimi Antonelli மற்றும் Lewis Hamiltonநை முந்தி அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

 

-----

 

இதனிடையே, ஜப்பான் ஆசிய போட்டியில் ஒன்பது தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்து, அபார வெற்றியுடன் நாடு திரும்பிய மலேசிய விளையாட்டாளர்களைப் பாராட்டியுள்ளார் பிரதமர்!

 

2010ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த அதே ஒன்பது தங்கப் பதக்க சாதனையை இம்முறையும் மலேசியா சமப்படுத்தியிருப்பது பெருமைக்குரியது என, அவர் தனது Facebookகில் குறிப்பிட்டுள்ளார்.

 

நேற்று நிறைவு விழா கண்ட ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா ஒட்டுமொத்தமாக ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களை ஈட்டியது.

 

------

 

UEFA Nations league கால்பந்து போட்டியின் குழு நிலை ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-1 என நோர்வேயை வென்றது.

 

நெதர்லாந்து செர்பியாவை 2-1 என தோற்கடித்த வேளை,

 

ஜெர்மனியும் Greeceசும் கோலின்றி சமநிலை கண்டன.

 

Kosovoவும் Austriaவும் 1-1 என சமநிலை கண்டன.

RAAGA Aaha Siranta Isai!