Skip to main content
Bahrain F1 பந்தையம்; மலேசிய பொருளாதாரத்தை உந்தச் செய்யும்!

 

வரும் அக்டோபரில் அட்டவணையிடப்பட்டுள்ள Bahrain F1 GP பந்தையத்தை ஏற்று நடத்துவதால், மலேசியாவின் பொருளாதாரத்தில் பலமான நேர்மறை தாக்கத்தை எதிர்ப்பார்க்கலாம்! 

Sepang அனைத்துலக பந்தையத்தளத்தில் நடைபெறவுள்ள அப்பந்தையத்தைக் காண வருவோரில் 30 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்களாக இருப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுற்றுலா, விமானப் போக்குவரத்து மற்றும் உணவு, பானத் துறைகள் உள்ளிட்டவை பயனடையும் என மலேசிய மோட்டார் பந்தய சங்கம் கணித்துள்ளது.

------ 

தனது LRT ரயில் ஒன்றின் கதவு தொழில்நுட்ப கோளாரு காரணமாக சரியாக மூடாததை அடுத்து, அந்த ரயிலை உடனடியாக செயல்பாட்டிலிருந்து நீக்கியிருக்கிறது Rapid KL! 

Gombakவை நோக்கிச் சென்ற Kelana Jaya LRT வழித்தடத்தில் அந்த ரயில் பயணித்த போது அக்கோளாரு ஏற்பட்டதாக, Rapid KL இன்று அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.

இந்த விஷியம் தெரிய வந்ததும், பயணிகளின்  பாதுகாப்பு உடனடியாக உறுதிச் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ரயில் சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

----- 

நாளை நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பில், 22 ஆயிரத்து முன்னூருக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்களும் அவர்களது துணைகளும் வாக்களிக்கவிருக்கின்றனர்!

38 வாக்களிப்பு மையங்கள் நாளை காலை எட்டு மணிக்கு திறக்கப்படும்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

------ 

பேராக், Teluk Intan-நில் இரு இளம் பெண்களை பலி கொண்ட விபத்தை ஏற்படுத்திய 28 வயது ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

போதை பொருளை உட்கொண்டிருந்த அவ்வாடவன் எதிரே வந்த காரைத் தவிர்ப்பதற்காக, தமது காரை மற்றொரு கார் மீதும் மோட்டார் சைக்கிள் மோதும் மோதியதாகக் காவல் துறை கூறியது.

----- 

குவாலா திரங்காணுவில் இல்லாத குத்தகை திட்டத்தை நம்பி 68 வயது மின்சேவை குத்தகையாளர் ஒருவர் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

 

RAAGA Aaha Siranta Isai!