Skip to main content
சமூக ஊடகத்தில் மனிதநேயத்தை இழக்காதீர் !

தொழில்நுட்பம் மாறலாம், நாம் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருக்கலாம் ! 

 

ஆனால் ஒழுக்கம், பண்பு, மனிதநேயத்தை இழக்கும் வரை சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தொடர்பு துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil அறிவுறுத்தியுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் Mohamad-டின் சூழ்நிலையை அனைத்து தரப்பினரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

கடந்த திங்கள் கிழமை அன்று அந்த முன்னாள் பிரதமரின் துணைவியார் உயிரிழந்ததை அடுத்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான நேரம்  வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

அண்மையில், துன் டாக்டர் மகாதீரை உட்படுத்தி சமூக ஊடகங்களில் பரவலாகும் தவறான உள்ளடக்கங்களை மேற்கோள் காட்டி Fahmi அவ்வாறு கூரினார்.

 

மேலும், அத்தகைய பதிவுகளைக் கண்டால், அவற்றைப் பகிராமல் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் அல்லது காவல்துறையிடம் புகாரளிக்கும்படியும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 

--

 

இவ்வேளையில், துன் டாக்டர் மகாதீர் தனது துணைவியாரின் மறைவால் துயரத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளை AI மூலம் மாற்றியமைத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட உள்ளடக்கங்களை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம ஆய்வு செய்து வருகிறது.

 

அதில் சட்டம் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என MCMC எச்சரித்துள்ளது.

 

--

நாட்டில் 4 இடங்களுக்கு மீண்டும் புகைமூட்டம் வந்துள்ளது!

 

சுற்றுச் சூழல் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, ஜொகூரில், பாசிர் கூடாங், லார்கின் மற்றும் சரவாக்கில் ஸ்ரீ அமான், செரியான் ஆகிய பகுதிகளில் API குறியீடு நூற்றுக்கும் மேல் பதிவாகியுள்ளன.

 

--

 

ஹோர்முஸ் நீரிணை வழியே குவைத் கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்த நிலையில்,  அதில் இருந்த 5 இந்தியர்கள் ஓமனுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

அவர்கள் காயமின்றி பாதுகாப்பாக உள்ளதாகவும், ஓமன் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைக்கு உதவியதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

RAAGA Aaha Siranta Isai!