
இன்று திறப்பு விழா காணும் Bahrain F1 GP பந்தையத்தைக் காண செப்பாங் அனைத்துலக பந்தையத்தளம் வரும் பார்வையாளர்கள், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!
வார இறுதி முழுவதும் அப்பந்தையத்தால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதனால் போக்குவரத்தும் நிலைக்குத்தலாம் என்பதால், குவாலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் அந்த அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளது.
KLIAவின் கார் நிறுத்துமிடத்தை நம்பி ஏராளமானோர் சொந்த வாகனங்களில் வரக்கூடும்; ஆனால் ஒவ்வோர் நாளும் தங்களின் கார் நிருத்துமிடம் நாள் தொடங்கும்போது நிறைந்து விடுகின்றன என அது கூறியது.
தினசரி ஒரு லட்சம் பேர் அப்பந்தையத்தளத்திற்கு வருவர் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லோரும் தங்களின் வாகனத்தை நிருத்த KLIA வருவதைத் தவிர்த்தால் தான், அதன் தினசரி போக்குவரத்தில் இடையூறு இருக்காது என்றும், அது கேட்டுக் கொண்டது.
------
இவ்வாரம் தமக்கு அட்டவணையிடப்பட்டிருந்த பெரும்பாலான நிகழ்வுகளுக்குத், தமது வருகையை ரத்து செய்துவிட்டார் பிரதமர் DSAI!
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் 2027 வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதற்கான ஆயத்த வேலைகளில் அவரது தரப்பு முழு மூச்சாக இறங்கியுள்ளது.
மக்களின் கருத்துக்களுடம் பல்வேறு தரப்புகளைக் கவனத்தில் கொண்டு இம்முறை பட்ஜட் தயார் செய்யப்பட்டுள்ளதாக.
குறிப்பாக இம்முறை கல்விக்கான ஒதுக்கீடுகள் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம் என பிரதமர் கோடி காட்டினார்.
-------
தனது 30 ரிங்கிட் மாதாந்திர பொது போக்குவரத்து மாணியத்தை KTM Komuter சேவைக்கும் விரிவுப்படுத்துகிறது சிலாங்கூர் மாநில அரசு!
இதற்கு முன் Rapid KL On-Demand மற்றும் Kumpool சேவைகளுக்கு மட்டுமான அந்த மானியம், தற்போது இந்த மேம்பாட்டுடன் உடனடி அமுலுக்கு வருவதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
-------
காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களில் தீயை அணைக்கும் தனது முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது இந்தோனேசியா!
கடந்த வாரம் முழுவதும் கிட்டத்தட்ட மூவாயிரத்து எண்ணூரு ஹெக்டர் அளவிலான நிலத்தில் தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.