
நாட்டிலுள்ள அனைத்து மாரா அறிவியல் இளநிலை கல்லூரிகள் MRSMமிலும், முன்னாள் ராணுவ உறுப்பினர்கள் முழு நேர வார்டன்களாக பணியமர்த்தப்படுவர்!
பகடிவதையை வேரறுத்து, ஆசிரியர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான அந்த நடவடிக்கை ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கும் என, மாரா தலைவர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்துள்ளார்.
முன்னூரு ரிங்கிட் வார்டன் அலாவன்ஸ் தொகையானது, கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொள்ள போதுமானதாக இல்லை என MRSM ஆசிரியர்களிடம் இருந்து கிடைத்த புகாரை அடுத்து, அந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பகடிவதை மாதிரியான குற்றச்செயல்கள் நடக்கின்றனவா என்பதை எந்நேரமும் ஆசிரியர்களே கண்காணிப்பது என்பது, நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்பதால், இனி அந்த முன்னாள் ராணுவ உறுப்பினர்கள் கையில் அந்த பொறுப்பு வழங்கப்படுகிறது என்றார் அவர்.
------
நெகிரி செம்பிலான் Kuala Pilahவில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காகம் மேலும் ஒரு 16 வயது மாணவர் கைதாகியுள்ளார்!
பள்ளி விதிமுறைகளை மீறியதாகக் கூறி தண்டிக்கப்பட்தட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவன் ஒருவன், முன்னதாக பள்ளி தங்கும் விடுதியில் இறந்துக் கிடக்கக் காணப்பட்டான்.
------
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும் Anthony Lokeகின் திட்டம் குறித்து, அந்த DAP பொதுச் செயலாளரைச் சந்தித்துப் பேசவுள்ளார் பிரதமர்!
நேற்று முன்தினமே Loke தனது பதவி விலகல் கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்துவிட்ட நிலையில், வேலை பலுவால் கடந்த இரு தினங்களாக அவரைச் சந்திக்க முடியவில்லை என DSAi தெரிவித்தார்.
-------
புதிய அடிப்படை மாதச் சம்பளம் குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை!
பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலோடுதான் எந்த முடிவாக இருந்தாலும் அறிவிக்கப்பாடும் என, மனிதவள அமைச்சர் DS Ramanan Ramakrishnan தெரிவித்துள்ளார்.
------
மொரோக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக Fatima Ezzahra El Mansouri, அந்நாட்டு மன்னர் ஆறாம் முதமது அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்!
ஒட்டுமொத்த அரபு உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் Fatima பெருகிறார்.