Skip to main content
நேபாள வெள்ளம் ; 1 மலேசியர் கண்டிபிடிப்பு !

 

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 55 மலேசியர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், Wisma Putra-விடமிருந்து அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை !

அந்த 55 மலேசியர்களின் குடும்பங்களைப் பிரதிநிதிக்கும் குழுவின் படி, அந்த மலேசியர், நேற்று காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தைச் சென்றடைந்துள்ளார்.

ஆகஸ்ட் இறுதியில் அங்கு வெள்ளம் ஏற்பட்டபோது, அவர் தனியாக Nagthali பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அந்த குழு கூறியது.

அவர் தற்போது மலேசியாவுக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் - திபெட் எல்லை பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், ஆயிரக்கணக்கானோர் மாண்ட வேளை, நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

---------

மறைந்த Tun Dr Siti Hasmah-வை நினைத்து, Tun Dr Mahathir Mohamad துயரப்படும் காட்சிகளைக் கொண்ட, AI மூலம் உருவாக்கப்பட்ட காணொலியைப் பகிர்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் !

அவ்வாறு தவறான காணொலிகளை உருவாக்கி அல்லது பகிர்வோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை பாயலாம் என மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, தனது தந்தைக்கு துயரத்தை வெளிப்படுத்தவும், அதிலிருந்து மீள்வதற்கும் போதிய நேரம் வழங்கி, அவரைத் தனியாக விடும்படி, அவரின் மகனான Datuk Seri Mukhriz Mahathir பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

---------

சிலாங்கூர் செப்பாங்கில், Formula 1 Bahrain Grand Prix பந்தயத்தை முன்னிட்டு,  போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, 365 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் !

போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, ரோந்து பணிகள், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்புப் பணிகளுக்காக, அவர்கள் களமிறங்குகின்றனர்.

அப்பந்தயத்தின் பயிற்சி சுற்று இன்று தொடங்கியுள்ள நிலையில், நாளை தகுதிச் சுற்றும், ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றும் நடைபெறவுள்ளன.

---------

தொலைக்காட்சி, வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய, 8 முதல் 12 வயது தமிழ்ப்பேசும் மாணவர்களுக்காக, Astro உலகம் இளம் செய்தி வாசிப்பாளர் தேடலைத் தொடங்கியுள்ளது !

ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்கு, தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ; தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கு விண்ணப்பிக்கவும், மேல் விவரங்களை அறியவும், Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

----------

ஆஸ்ட்ரோவின் உள்ளடக்கங்களும், கலைஞர்களும் தொடர்ந்து தொழில்துறை அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றனர் !

ஆசிய Academy Creative Awards 2026 விருது விழாவில், Astro, 19 தேசிய அளவிலான விருதுகளை வென்றுள்ளது.

அவற்றில், Good Boys Go to Heaven, 5 விருதுகளையும், Malam Terlarang, 4 விருதுகளையும் வென்றுள்ளன.

இந்த வெற்றியாளர்கள், தற்போது விருதுகளின் அனைத்துலக பிரிவில் போட்டியிடவுள்ளனர்.

RAAGA Aaha Siranta Isai!