Skip to main content

Advertisement

ஆசிய போட்டி: தங்கம் வெல்ல ஸ்குவாஷ் உறுதி!

 


ஆசிய விளையாட்டுப் போட்டியில் மென்மேலும் தங்கப் பதக்கங்களை வாறி குவிக்க இலக்கு வைத்துள்ளது தேசிய squash அணி!

 

ஏற்கனவே ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் தங்கம் வாங்கித் தந்த squash அணி, அதை எண்ணி இனி வரும் சுற்றுகளை மெத்தனமாக எடுத்துக் கொள்ளாது என, தேசிய squash அணி நிர்வாகி Sharon Wee தெரிவித்துள்ளார்.

 

மகளிர் மற்றும் ஆடவர் குழு நிலை பிரிவுகளில் இன்று மலேசியா போட்டியிடுகிறது.

 

இதற்கு முன் S சிவசங்கரி மகளிர் ஒற்றையர் பிரிவிலும், Ng Eain Yow ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் தங்கம் வென்றனர்.

 

-----

 

இதனிடையே ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா இன்று ஒரு தங்கப் பதக்கத்தை வெல்லக் கூடும்!

ஆடவருக்கான regu பிரிவின் இறுதிச் சுற்றில் இன்று காலை மணி 9.30க்கு தேசிய சேப்பாக் தக்ரோ அணி கதாய்லாந்தைச் சந்திக்கிறது.

இன்று முக்குளிப்பு,track சைக்கிளோட்டம் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விளையாட்டாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro ARENA, Stadiumastro, ஐந்து பிரத்யேக அலைவரிசைகள் மற்றும் Astro Goவில் கண்டு களிக்கலாம்.

-----

உலகக் கால்பந்து அமைப்பின் ஏற்பாட்டிலான ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியின் A குழு ஆட்டத்தில், மலேசியா இந்தோனேசியாவுடன் கோலின்றி சமநிலை கண்டது!

RAAGA Aaha Siranta Isai!