
ஆசிய போட்டியில் இன்று மலேசியாவுக்குத் தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது!
மகளிர் Squash பிரிவில் S சிவசங்கரியும்,ஆடவர் பிரிவில் Ng Eain Yowவும் இன்று இறுதிச் சுற்றில் களமிறங்கவிருக்கின்றனர்.
ஆசிய போட்டியில் தங்கம் வெல்லும் வீரர் வீராங்கணை 2028 ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவர்.
அவ்வாட்டங்களின் நேரடி ஒளிபரப்பை இன்று மாலை 3 மணி தொடங்கி, Astro ARENA அலைவரிசை 801றில் காணத் தவறாதீர்கள்.
-----
இதனிடையே பூப்பந்து வாயிலாக மலேசியாவுக்குக் குறைந்தது வெண்கலம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சற்று முன்னர் நடந்து முடிந்த காலிறுதி ஆட்டத்தில் மகளிர் இரட்டையர் Pearly Tan M Thinaah இந்திய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.
-----
இதனிடையே மகளிருக்கான மூன்று மீட்டர் Synchronised springboard பிரிவில் சற்று முன்னர் மலேசியாவுக்கு ஒரு வெண்கலம் கிடைத்தது!
தேசிய முக்குளிப்பு வீராங்கணைகளான Ong Ker Ying-Lee Yiat Qing அந்த வெண்கலப் பதக்கத்தை ஈட்டித் தந்தனர்.
முன்னதாக ஆடவருக்கான மூன்று மீட்டர் springboard, synchronise பிரிவில் முக்குளிப்பு வீரர்களானYong Rui Jie மற்றும் Nurqayyum Nazmi Mohamad Nazim வெண்கலம் வென்றனர்.
C. Ameeshanraj-Rachel Arnold கலப்பு squash பிரிவில் வெண்கலப் பதக்கத்தை ஈட்டித் தந்தனர்.
ஆகக் கடைசி தகவல்படி ஆசிய போட்டியில் மலேசியா நான்கு தங்கம் ஒரு வெள்ளி ஒன்பது வெண்கலப் பதக்கங்களைக் கொண்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, Astro ARENA, Stadiumastro. ஐந்து பிரத்யேக அலைவரிசைகள் மற்றும் Astro Goவில் காணலாம்.
----
UEFA Nations லீக் கால்பந்து போட்டியில் Spain 3-2 என இங்கிலாந்தைத் தோற்கடித்தது!
Croatia, செக் குடியரசை 2-1 என தோற்கடித்த வேளை, Scotland, Sloveniaவுடன் கோலின்றி சமநிலை கண்டது.