
ஆசிய விளையாட்டுப் போட்டியில், தேசிய sepak takraw அணி, ரெகு குழு இறுதியாட்டத்தில், வெள்ளிப் பதக்கம் வென்று, போட்டியை நிறைவுச் செய்துள்ளது !
அவ்வாட்டத்தில், அவ்வணி, தாய்லாந்திடம் வீழ்ந்தது.
அதே வேளை, தேசிய மகளிர் ஸ்குவாஷ் அணி, குழு பிரிவின் Pool A-வில், இரண்டாவது ஆட்டத்தில், சிங்கப்பூரை 3-0 என வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
தற்போது, மலேசியா 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
--------
இதனிடையே, அப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாலும், இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாதது ஏமாற்றமளிப்பதாக, தேசிய மகளிர் இரட்டையர் வீராங்கனைகள் Pearly Tan - M. Thinaah தெரிவித்துள்ளனர் !
அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், சீன ஜோடிக்கு எதிராக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாக அவர்கள் கூறினர்.
கடந்த சில மாதங்கள் சவாலானதாக இருந்த நிலையில், தற்போது தங்களது ஆட்டத்திறனை மீண்டும் கண்டறிந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தங்களது ஆட்ட பாணி, யுக்தி மற்றும் இருவருக்கிடையேயான தொடர்பை படிப்படியாக மேம்படுத்தி வருவதாகக் கூறிய அவர்கள், தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
----------
இவ்வேளையில், கிரிக்கெட் விளையாட்டு அரையிறுதியில், இலங்கை, இந்தியாவையும், வங்காளதேசம், பாகிஸ்தானையும் எதிர்கொள்ளவுள்ளன !
மழை காரணமாக இலங்கை - நேபாளம் இடையிலான காலிறுதி ஆட்டம் கைவிடப்பட்டதால், தரவரிசையில் முன்னிலையில் இருந்த இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியது.
அதே போல், தரவரிசையில் பின்தங்கிய மலேசியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானதால், வங்காளதேச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro ARENA, Stadiumastro, ஐந்து பிரத்தியேக அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் கண்டு களிக்கலாம்.
---------
தாக்குதல் ஆட்டக்காரர் Erling Haaland, Manchester City-யில் இருந்து விலக நேரிட்டால், அவருக்காக மிகப் பெரிய தொகையை நிர்ணையிக்க, அணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது !
Premier League நிதி விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில், City கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டால், அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.