Skip to main content

Advertisement

ஆசிய விளையாட்டு ; பதக்கங்களை வெல்லும் மலேசியா !

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியாவுக்கு பதக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன !

சற்று முன்னர் நடந்து முடிந்த மகளிருக்கான Keirin பிரிவு உள்ளரங்கு சைக்கிளோட்ட இறுதியாட்டத்தில், தேசிய வீராங்கனை Nurul Izzah Izzati, வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதே வேளை, Nur Alyssa Farid, ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

Squash விளையாட்டைப் பார்க்கையில், தேசிய ஆடவர் அணி, 2-0 என ஜப்பானை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

தேசிய மகளிர் அணியும், மக்காவை 2-0 என தோற்கடித்து, அரையிறுதியில் கால் பதித்தது.

இதனிடையே, Identity 5  பிரிவில், உபசரணை நாடான ஜப்பானை வீழ்த்தி, தேசிய Esports அணி, வெண்கலப் பதக்கம் வென்றது.

---------

அதே வேளை, ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் Nagoya நகரில், போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பில் விளையாட்டு வீரர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த நகர மேயர் அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் !

-----------

Brazil தேசிய அணி பயிற்றுநர் Carlo Ancelotti, Vinicius Jr மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார் !

அவர், இப்பருவ தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், விரைவில் தனது சிறந்த ஆட்டத்துக்குத் திரும்பி மிளிர்வார் என Ancelotti சொன்னார்.

இப்பருவத்தில், Real Madrid அணிக்காக அனைத்து போட்டிகளிலும் எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள Vinicius, இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார்.

15 புள்ளிகளுடன் La Liga பட்டியலில் Real Madrid தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.

---------

Jude Bellingham, எதிர்காலத்தில் இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியின் நிரந்தர கேப்டனாக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக, பயிற்றுநர் Thomas Tuchel தெரிவித்துள்ளார் !

தற்போது அணியுடன் இருப்பதை Bellingham விரும்புவதாகவும், அவரது கேப்டன் பொறுப்பு குறித்து தாம் கலந்துரையாடியதாகவும் Tuchel கூறினார்.

RAAGA Aaha Siranta Isai!