
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறு தங்கப் பதக்க இலக்கை அடைந்துவிட்டது மலேசியா!
ஆகக் கடைசியாக மகளிர் ஒற்றையர் Squash பிரிவில் தேசிய தாரகை S சிவசங்கரி தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
நேற்றிரவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கணையைச் சந்தித்த அவர், நேரடி செட்களில் வெற்றிப் பெற்றார்.
2028 ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதிப் பெற வகைச் செய்யும் இந்த வெற்றியானது, தமக்கு மிகவும் அர்த்தமுள்ளது என வர்ணித்தார் சிவசங்கரி.
நேற்று ஆடவருக்கான squash பிரிவிலும் Ng Eain Yow வாயிலாக மலேசியாவுக்குத் தங்கம் கிட்டியது.
இறுதிச் சுற்றில் அவரும் இந்திய வீரரை நேரடி செட்களில் வீழ்த்தினார்.
ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிப் பெறும் முதல் வீரர் வீராங்கணையாக Eain Yowவும், சிவசங்கரியும் வரலாற்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-----
இதனிடையே நேற்று ஆடவருக்கான முக்குளிப்புப் பிரிவில் மலேசியா ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றது!
ஆடவருக்கான 10 மீட்டர் synchronised பிரிவில் Elvis Priestly மற்றும் Enrique Harold இரண்டாம் நிலை வெற்றியாளராகினர்.
------
ஆகக் கடைசி தகவல்படி பதக்கப்பட்டியலில் ஆறு தங்கம், இரு வெள்ளி எட்டு வெண்கலப் பதக்கங்களுடன் மலேசியா பதக்கப் பட்டியலில் பத்தாம் இடத்தில் இருக்கிறது.
119 தங்கங்களுடன் சீனா முதலிடம் வகிக்கிறது.
ஆசிய போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro Arena, Stadium Astro, ஐந்து பிரத்யேக அலைவரிசைகள் மற்றும் Astro GOவில் காணலாம்.
-----
UEFA Nations லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சிகல் 2-1 என நோர்வேயை வீழ்த்தியது!
ஜெர்மனி, 0-1 என Greeceசிடம் வீழ்ந்தது.
நெதர்லாந்து செர்பியாவை 2-1 என தோற்கடித்த வேளை,
டென்மார்க் Walesசை 2-0 என வீழ்த்தியது.