Skip to main content

Advertisement

Bahrain GP பந்தையம்: ஒரு லட்சம் டிக்கட்டுகள் முடிந்தது!

செப்பாங் அனைத்துலக பந்தையத்தளத்தில் இவ்வார இறுதியில் நடைபெறும் Bahrain F1 GP பந்தையத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட ஒரு லட்சம் டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன!

இது ஒரு வரலாற்றுச் சாதனை என, அப்பந்தையத்தளத்தின் தலைமை செயல்முறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அப்பந்தையத்தளத்தில் நடைபெறும் பந்தையத்திற்கு விற்கப்பட்டுள்ள மிக அதிக டிக்கட்டு எண்ணிக்கை அதுவாகும்.

கிட்டத்தட்ட மூவாயிரம் டிக்கட்டுகள் இன்னும் எஞ்சியிருக்கும் நிலையில், பொதுமக்கள் அதனை இணையத்தில் வாங்கிக் கொள்ளலாம் என, அப்பந்தையத்தளம் தெரிவித்தது.

-

இதனிடையே நாட்டில் ஆங்காங்கே புகைமூட்டம் சூழந்திருந்தாலும், இவ்வார இறுதியில் அட்டவணையிடப்பட்டுள்ள பந்தையம், KL Marathon, Le Tour De Langkawi ஆகிய போட்டிகள், திட்டமிட்டபடி நடைபெறும்!

காற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்தது.

-

ஆசிய போட்டியில் இன்னும் அதிகமான பதக்கங்களை வாங்கிக் குவிப்பதில் குறியாக இருக்கின்றனர்.

இன்று நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் squash அணி முறையே இந்தியா மற்றும் ஜப்பானைச் சந்திக்கிறது!

Track சைக்கிளோட்ட வீரர் Datuk Azizulhasni Awang ஆடவருக்கான sprint பிரிவில் காலுறுதிச் சுற்றில் களமிறங்குகிறார்.

RAAGA Aaha Siranta Isai!