Skip to main content

Advertisement

சேப்பாக் தக்ராவ் அணிக்கு பிரதமர் வாழ்த்து !

 

 

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை என்பது, வீடு, பயிற்சி, போட்டி என தொடர்ந்து பயணிக்கும் ஒன்று ! 
 
அந்த வகையில், பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில், ஆசிய விளையாட்டுப் போட்டியில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது வீரர்கள் பதக்கம் வென்றிருப்பது, சாதாரணமான சாதனை அல்ல என, தேசிய கராத்தே தலைமை பயிற்றுநர் R.ஷர்மேந்திரன் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், தங்கம் வெல்லும் கராத்தே வீரர்களுக்கு கார், பரிசாக வழங்கப்படும் எனும் அறிவிப்பு, தனது வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் கொடுத்ததாக அவர் கூறினார்.
  
அப்போட்டிக்கு, ஒரே பதக்க இலக்கோடு சென்ற தேசிய கராதே அணி, 2 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்று, போட்டியை நிறைவுச் செய்தது. 
 
இவ்வேளையில், நேற்று அதிகாலை 1 மணி வாக்கில், ஜப்பானில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த கராத்தே வீரர்களுக்கு, உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே, பயிற்றுநர் ஷர்மேந்திரன், மற்றும் வீரர்களான C.ஷாமலராணி, K.தேவேந்திரன்,  H.சூரியா ஆகியோருடனான நேர்காணல் விரைவில் இடம்பெறும் ; இந்தச் சிறப்பு நேர்காணலை, கூடிய விரைவில் RAAGA Podcast வாயிலாகக் கேட்டு மகிழலாம்.

---------

மற்றொரு தேசிய sepak takraw அணி வீரர்கள், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ரெகு குழுப் பிரிவில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, தலா பத்தாயிரம் ரிங்கிட் பரிசுத் தொகையைப் பெறவுள்ளனர் !

முன்னதாக, அவர்களுக்கு தலா ஏழாயிரம் ரிங்கிட் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவ்வணியின் தரமான வெற்றியைக் கருத்திற்கொண்டு, அத்தொகை பத்தாயிரம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதாக, தேசிய sepak takraw சம்மேளனத் தலைவர் தெரிவித்தார்.

----------

இதனிடையே, அவ்வணிக்கு, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார் !

இந்த வெற்றி, ஒட்டுமொத்த மலேசிய மக்களுக்கும் மிகவும் அர்த்தமிக்கதும், பெருமைக்குரியதுமான வெற்றி என, அவர் வர்ணித்துள்ளார்.

----------

இவ்வேளையில், மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், தாம் வென்ற வெண்கலப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் Shereen Samson Vallabouy-யின் இலக்கு கைகூடவில்லை !

அவர் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

RAAGA Aaha Siranta Isai!