Skip to main content

Advertisement

ஒரே நாளில் மலேசியா 3 தங்கங்கள் !

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியா பதக்கங்களைக் குவித்து வருகிறது !

Squash ஆடவர் அணி, குழு பிரிவின் இறுதியாட்டத்தில், 2-0 என வெற்றி பெற்று, தங்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஆடவர் குழு பிரிவு இறுதியாட்டத்தில், மலேசியா - பாகிஸ்தானை தோற்கடித்தது.

அதே வேளை, Squash மகளிர் அணி, குழு பிரிவின் இறுதியாட்டத்தில், 2-1 என Hong Kong-கை வீழ்த்தி தங்கம் வென்றது.

மற்றொரு பக்கம், தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் Mohd Azizulhasni Awang, நாட்டுக்கு மேலும் ஒரு தங்கத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் !

சற்று முன்னர் நடந்து முடிந்த, ஆடவர் Keirin பிரிவின் இறுதியாட்டத்தில், அவர்  தங்கம் வென்றார்.

இதன் வழி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை தற்போது ஒன்பதாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியாவின் இதுவரையிலான சிறந்த சாதனையை, தேசிய அணி சமப்படுத்தியது.

2010-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், மலேசியா ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

RAAGA Aaha Siranta Isai!