
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமக்குக் கிடைத்த வெண்கலப் பதக்கம், மறைந்த தனது அன்பிற்குரிய பாட்டிக்கு சமர்ப்பனம்!
தேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் 12 ஆண்டு கால பதக்க வரட்சிக்கு முடிவு கட்டிய பிறகு, அவ்வாறு கூறினார் தேசிய பூப்பந்து வீராங்கணை M Thinaah.
கடந்த மாதம், தனது தூணாக இருந்த பாட்டியையும் தனது செல்லப் பிராணியான முயல்குட்டியையும் குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்து இழந்தது பேரிழப்பாக இருந்தது என அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அவ்விழப்புகளால் கடந்த சில வாரங்களே சவால் மிக்கவையாக மாறிவிட்டன என்றார் தீனா.
நேற்றைய அரையிறுதியில் சீன ஜோடியைச் சந்தித்த Pearly Tanநும் தீனாவும் மூன்று செட்களில் தோல்வி கண்டு, வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்.
-----
இதனிடையே இன்று ஆசிய போட்டியில் மலேசிய track சைக்கிளோட்ட வீரர்களின் பயணம் தொடங்குகிறது!
Datuk Azizulhasni Awangம் Mohd Shah Firdaus Sahromமும் முதல் சுற்றில் இன்று விளையாடுவர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro ARENA, Stadiumastro, ஐந்து பிரத்யேக அலைவரிசைகள் மற்றும் Astro Goவில் கண்டு களிக்கலாம்.
------
UEFA Nations லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து செக் குடியரசை 2-0 என வீழ்த்தியது!
Spain 4-1 என Croatiaவைத் தோற்கடித்த வேளை,
Switzerlandது, 3-0 என Scotlandடை வென்றது.