Skip to main content

Advertisement

பத்தாவது பதக்கத்துக்கு மலேசியா இலக்கு !

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10-வது தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது தேசிய அணி ! 

போட்டியின் இறுதி நாளான இன்று, மலேசியா இதுவரை எட்டாத ஒரு சாதனையைப் படைக்க இலக்குக் கொண்டுள்ளது.

இன்று நடைப்பெறவிருக்கும் ஆடவருக்கான ஹாக்கிப் போட்டியில், Speedy Tigers இந்தியாவை எதிர்கொள்கிறது.

அது, மிகவும் விறுவிறுப்பான இறுதி ஆட்டமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,

மேலும், Padel, Taekwondo,படகோட்டம், ரக்பி, குதிரையேற்றம் உள்ளிட்ட மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் தேசிய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

2010-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா கடைசியாக ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, Astro ARENA, Stadiumastro, ஐந்து பிரத்தியேக அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.

 

--

 

பிரீமியர் லீக்கின் நிதி விதிமுறைகளை, Man City மீறியதாக சுயேட்சை ஆணையம் ஒன்று கண்டறிந்ததை அடுத்து, அதற்கு எதிராக அணி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது!

அவ்வாணையத்தின் தீர்ப்பில் சட்டம், கொள்கை, தீர்ப்பை பாதிக்கக்கூடிய முக்கியமான தவறுகள் இருப்பதாக கிளப் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2009-10, 2017-18 ஆகிய பருவங்களில், சிட்டி மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூப்பிக்கப்பட்டு, குற்றவாளி என தீர்ப்பானது.

--

நேஷன்ஸ் லீக் முடிவுகள்...

Poland Romania-வை 6 – சுழியம் என பந்தாடியது.

Belgium Turkiye-வை 3 – சுழியம் என வென்றது.  

France-சும் Italy-யும் 1 – 1 என சமநிலைக் கண்டன. 

அதே போல் Sweden மற்றும் Bosnia & Herzegovina வின் ஆட்டமும் சமநிலையில் முடிந்தன .

 

RAAGA Aaha Siranta Isai!