Skip to main content

Advertisement

வெண்கலம் வென்ற Azizul !

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசியா பதங்களை வென்று வருகிறது !

தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் Mohd Azizulhasni Awang, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சற்று முன்னர் நடந்து முடிந்த வெண்கலப் பதக்கதுக்கான ஆட்டத்தில், Sprint பிரிவில், அவர் தாய்லாந்து வீரரை தோற்கடித்தார்.

--------

இதனிடையே, தேசிய Squash மகளிர் அணி, இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

இன்று அரையிறுதியில், அது ஜப்பானை வீழ்த்தியது.

நாளை, இறுதியாட்டத்தில் அவ்வணி, Hong Kong-குடன் மோதுகிறது.

----------

ஆசியான் கிண்ண A குழுவின் கடைசி ஆட்டத்தில், இன்றிரவு சிங்கப்பூரை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய மலேசியா முனைகிறது !

இது முக்கியமான ஆட்டம் என்றாலும், Harimau Malaya வீரர்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராகவும், நம்பிக்கையுடனும் இருப்பதாக, இடைக்காலப் பயிற்றுநர் Tan Cheng Hoe தெரிவித்துள்ளார்.

மலேசியா - சிங்கப்பூர் மோதும் ஆட்டத்தை, இரவு மணி 8.30-க்கு, Astro-வில், Sukan+ அலைவரிசை 806-ரில் நேரலையாகக் காணலாம்.

RAAGA Aaha Siranta Isai!