Global Sumud Flotilla மனிதாபிமான பணியில் பங்கேற்ற 29 மலேசியர்களும், தற்போது துருக்கியேவில் பாதுகாப்பாக உள்ளனர் !
அவர்கள் அனைவரும் அந்நாட்டில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாளை அவர்கள் தாயகத்துக்குத் திரும்பவுள்ளனர்.
அவர்களின் விடுதலை மற்றும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளுக்கு வழங்கிய உதவி மற்றும் ஆதரவிற்காக, துருக்கியே அரசாங்கத்திற்கு, மலேசியா நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.
---------
தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பு செயலியை, பதிவிறக்கம் செய்ய, அனைத்து மலேசியர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர் !
இதன் வழி, குடிநுழைவு சேவைகள் மேலும் திறம்படவும், தடையற்ற முறையிலும் கிடைக்கும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களை பதிவுச் செய்துக்கொள்ள வேண்டும் என அமைச்சு கேட்டுக்கொண்டது.
--------
ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சாலை போக்குவரத்து துறை, 6 டிரோன் கேமராக்களை, முக்கியமான சில பகுதிகளில் பயன்படுத்தவுள்ளது !
போக்குவரத்து குற்றங்கள் புரிபவர்கள், அதன் வழி பிடிப்படுவர்.
நாளை தொடங்கி, இம்மாத இறுதி வரை, JPJ அந்நடவடிக்கையில் இறங்கும்.
----------
ஜொகூர் Pontian-னில், இளைஞர் ஒருவர் கொலையுண்ட சம்பவம் தொடர்பில், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர் !
---------
சிலாங்கூரில், சட்டவிரோதமாக மின் கழிவுகளை பதப்படுத்தும் கும்பலை காவல்துறை முறியடித்துள்ளது ; அதில், சுமார் 1.25 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதலானது !