Skip to main content
கடப்பிதழை இலக்கவியலில் புதுப்பிக்கலாம்!

 

 

மலேசியர்கள் இனி தங்களின் கடப்பிதழை MyGov Malaysia செயலி மூலமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம்!

 

பொதுச் சேவை துறையை இலக்கவியல் மயமாக்கும் அரசாங்கம் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி அறிமுகம் காண்பதாக, இலக்கவியல் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

MyGov செயலியில் மலேசியர்கள், கடப்பிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், இணையவழி கட்டணம் செலுத்துதல், கடப்பிதழைப் பெற்றுக்கொள்வதற்கான குடிநுழைவுத் துறை கிளையைத் தேர்ந்தெடுத்தல் ஆகிய சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

 

என்றாலும் கடப்பிதழைப் பெற்றுக் கொள்ளும் கிளை இப்போதைக்கு Putrajaya மட்டுமே என்றும், கட்டங்கட்டமாக மற்ற இடங்களுக்கும் அது விரிவுப்படுத்தப்படும் என்றும் அவ்வமைச்சு மேலும் குறிப்பிட்டது.

 

-------

இதனிடையே மலேசியர்களின் Mykad அடையாள அட்டையையும் இலக்கவியல்மயாக்கும் சட்டத்திருத்த மசோதாவை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது!

வாகனமோட்டும் உரிமத்தைப் போல, அடையாள அட்டையையும் MyGov செயலியில் வைத்துக் கொள்ள அதன் கீழ் அனுமதி வழங்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்தார்.

வரக்கூடிய காலங்களில், IC, வாகன உரிமம், திருமண மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகிய எல்லவற்றையும் ஒரே செயலியின் கீழ் வைத்துக் கொள்ளும் பரிந்துரையும் அமைச்சர் பரிந்துரைத்தார்.

------- 

 

போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச மலேசிய வான்படையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் தடுப்புக் காவல் இன்று தொடங்கி மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது!

 

அவர்களுடன் கைதான மேலும் நால்வரது தடுப்புக் காவல் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் தெரிவித்தார்.

 

கிட்டத்தட்ட நூரு கிலோகிராம் எடையிலான போதை பொருளை விநியோகிக்க அவர்கள் TUDMமின் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் தாகினர்.

 

-------

 

2029ஆம் ஆண்டு முதல் ஆறு வயது பிள்ளைகள் ஒன்றாம் ஆண்டில் பதிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயமாக்கப்படும்!

 

அதற்கான ஆயத்த வேலைகள் இவ்வாண்டிலிருந்து தொடங்குகின்றது என, கல்வி அமைச்சு கூறியிருக்கிறது.

 

அப்புதிய விதிமுறையை சுமூகமாக மேற்கொள்ள ஏதுவாக, 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் ஆறு வயது பிள்ளைகள் ஒன்றாம் ஆண்டில் சேறுவது விருப்பத்திற்குரியதாகவே இருக்கு என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

 

------

 

பேராக், பஹாங், சிலாங்கூர், மற்றும் ஜொகூரில் கனமழை எச்சரிக்கை!

 

அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MetMalaysia கணித்துள்ளது.

 

------

 

Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்!

 

இப்போலிருந்து இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

 

வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு.

 

வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

RAAGA Aaha Siranta Isai!