Skip to main content
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ; கடுமையான சட்டம் தேவை !

 

 

மதுபானம் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டும் ஓட்டுநர்களுக்கு, கடுமையான சட்ட அமலாக்கம் தேவை !

மலேசிய தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார சங்கம், அவ்வாறு தெரிவித்துள்ளது.

வாகனங்களில், ஓட்டுநர் போதைப்பொருள், மது போதையில் உள்ளாரா என்பதை கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பரிந்துரை குறித்தும், பரிசீலிக்கப்பட வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியது.

இனி வரும் காலங்களில் அது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க, அது உதவும் என MSOSH கூறியது.

நேற்று சிலாங்கூர் கிள்ளானில்,  மது போதையில் இருந்த கார் ஓட்டுனர், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை மோதித் தள்ளி மரணமடைய வைத்த சம்பவத்தை, அது சுட்டிக்காட்டியது.

----------

இதனிடையே, போதைப்பொருள் மது போதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்களைக் கையாள, அதிகபட்ச சிறைத் தண்டனைகள், பிரம்படி உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார் !

குற்றவாளிகளுக்குப் பாடம் புகட்ட, தற்போதுள்ள அணுகுமுறை இன்னும் போதுமானதாக இல்லை என அவர் கூறினார்.

-----------

இவ்வேளையில், கிள்ளானில் மரண விபத்தை ஏற்படுத்திய, 20 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுனர், வியாழக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுகிறார் !

சில வாகனங்களை முந்தி வந்த சம்பந்தப்பட்ட கார் எதிர்திசையில் சென்ற நிலையில், அது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய வேளை, மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

-----------

ரோன் 95 ரக பெட்ரோல் வாங்க, மற்ற நாடுகளின் Credit மற்றும் debit அட்டைகளைப் பயன்படுத்த விதிக்கப்படும் தடை, மலேசியாவின் எரிபொருள் மானிய முறையை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது !

இந்நடவடிக்கை, அதே நாளில் அமலுக்கு வரும், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு RON95 விற்பனைத் தடையை மேலும் வலுப்படுத்துவதாக, மலேசிய பெட்ரோல் நிலைய நடத்துநர் சங்கம்  தெரிவித்துள்ளது !

---------

பினாங்கில், வெப்பம் நிலவினாலும், இப்போதைக்கு பள்ளிகளில் வீட்டில் இருந்து கற்றல் கற்பித்தல் முறை அமலுக்கு வராது என மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!