
கிள்ளான் துறைமுகத்தில் தம்மீது சுமத்தப்பட்ட மிருகவதை குற்றச்சாட்டை மறுத்துள்ளார் 24 வயது ஆடவர் ஒருவர்!
தெரு நாய் ஒன்றைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது அவர் rocky என்றழைக்கப்படும் நாய் ஒன்றிடம் கடுமையாக நடந்துக் கொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
சம்பந்தப்பட்ட ஆடவர் அந்நாயைப் பிடிக்கும் முயறசியில் அதனை கயிற்றால் மோசமாக இழுத்து துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனிடையே rockyயின் உரிமையாளரான மாது மீதும் மிருகவதை குற்றன் சுமத்தப்பட்ட நிலையில், அவரும் தம்மீது குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
-
தலைநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் பலி கொண்ட விபத்தில் சன்பந்தப்பட்ட truck லாரி ஓட்டுனரை, குடிநுழைவுத் துறை இடைநீக்கம் செய்துள்ளது!
விசாரணை முடியும் வரை அந்த இடைநீக்கம் அமுலில் இருக்கும் என, அத்துறையின் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
-
இதனிடையே அந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு குடிநுழைவுத் துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சு குடிநுழைவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அவ்விவகாரத்தில் கவனக் குறைவு அல்லது விதிமீறல் அம்சங்கள் ஏதும் இருந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வமைச்சு கூறியது.
-
KLலில் உள்ள கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தூரத்திலான சாலைகளின் மேல்பரப்புகள் கட்டங்கட்டமாக சரிச்செய்யப்படவிருக்கின்றன!
அவை குழிகள் இல்லாமல் இருப்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கமாகும்.
அந்த சரிபார்ப்பு வேலைகள் சீராக மேற்கொள்ளப்படுவது கண்காணிக்கப்பட்டு உறுதிச் செய்யப்படும் என கூட்டரசு பிரதேச அமைச்சு தெரிவித்தது.
--
நேற்று வரை அரசாங்கம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் மோசடி தொடர்பான பதிவுகளை இணையத்திலிருந்து நீக்கியிருக்கிறது!
அவற்றுள் பெரும்பாலானவை Facebook மற்றும் TikTokகில் பதிவிடப்பட்டவையாகும்.