Skip to main content
மலேசிய பிரதமரும், இந்தோனேசிய அதிபரும் சந்திப்பு !

 

பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, ஒரு நாள் பயணமாக இந்தோனேசியாவுக்குச் சென்று, அந்நாட்டு அதிபரைச் சந்தித்து பேசியுள்ளார் !

அச்சந்திப்பில், மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து அவ்விருவரும் பேசினர்.

அதையடுத்து, மலேசியாவும்,  இந்தோனேசியாவும், அம்மோதல்களை குறைக்கும் நோக்கில் தூதரக முயற்சிகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.

---------

இதனிடையே,  அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு குறித்து, பினாங்கு பரிசீலித்து வருகிறது !

அதற்கு முன், கூட்டரசு அரசாங்கத்தின் அது குறித்த மேலதிக தகவல்களுக்காக, மாநில அரசாங்கம் காத்திருக்கிறது.

மேற்காசியாவில் நிலவி வரும் மோதல்களால் எரிபொருள் விலை, குறிப்பாக டீசல் விலை, அதிகரித்துள்ள நிலையில்,  அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை பிரதமர் பரிந்துரைத்திருந்தார்.

---------

பெர்லிசில், பெட்ரோல் மற்றும் டீசலை, தாய்லாந்துக்குக் கடத்த முயன்ற 3 தாய்லாந்து ஆடவர்கள் பிடிபட்டுள்ளனர் !

மாற்றியமைக்கப்பட்ட வாகன Tank-குகளைப் பயன்படுத்தி, அவர்கள் அவற்றை கடத்த முயன்றனர்.

---------

கெடாவில் மட்டும் 5 இடங்களிலும், Hulu பேராக் மற்றும் ஒட்டுமொத்த பெர்லிசிலும், இரண்டாம் கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !

அப்பகுதிகளில், தொடர்ந்து 3 நாட்களுக்கு வெப்பம், 37 முதல் 40 பாகை செல்சியஸ் வரை பதிவாகி இருக்கும் என, மலேசிய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

---------

இவ்வேளையில், மலாக்காவில், முக்கிய அணைகளில் நீர்மட்டம், 25 விழுக்காடு வரை குறைந்திருந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம், நிலையாகவும், தற்போதைய தேவைக்கு போதுமானதாக உள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் !

RAAGA Aaha Siranta Isai!