Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

UMNO-வைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் நீடிப்பார்கள்!

Mar 31, 2021


UMNO- வைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் நீடிப்பார்கள் என பிரதமர் அறிவித்துள்ளார்!

UMNO அமைச்சர்கள் சிலர் முக்கியமான துறைகளை கவனித்து வருகின்றனர்; அமைச்சரவையில் இருந்து அவர்கள் விலகினால் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டம் குறிப்பாக தேசிய தடுப்பூசித் திட்டம் பாதிக்கப்படும் என தாம் கொடுத்த அறிவுரையை ஏற்று, அமைச்சரவையில் நீடிக்க அவர்கள் முடிவெடுத்திருப்பதாக Tan Sri Muhyiddin Yassin சொன்னார்.

umno-வைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் நீடிப்பார்கள்!

15-ஆவது பொதுத் தேர்தலில் BERSATU கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என அம்னோ பொதுப் பேரவை எடுத்த முடிவை தெரிவிப்பதற்காக, UMNO அமைச்சர்கள் நேற்று முந்தினம் பிரதமரைச் சந்தித்து பேசினர்.

அதன் போது அவ்விஷயத்தில் இணக்கம் காணப்பட்டதாக முகிதின் கூறினார்.  

BERSATU-வுடனான உறவை முடித்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க, அரசாங்கத்தில் இருந்து  எப்போது விலகுவது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அம்னோ உச்சமன்றத்திடம் கொடுக்க, ஞாயிறன்று நிறைவடைந்த பொதுப் பேரவை முடிவு செய்தது.

umno-வைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் நீடிப்பார்கள்!

முகிதின் அமைச்சரவையில், UMNO உதவித் தலைவர் Datuk Seri Ismail Sabri Yackob, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சராகவும், Datuk Seri Adam Baba, சுகாதார அமைச்சராகவும், Khairy Jamaluddin அறிவியல்-தொழில்நுட்ப-புத்தாக்க அமைச்சராகவும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

umno-வைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் நீடிப்பார்கள்!

Khairy, தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

 

 

மேலும் செய்திகள்..........

 

அமைதி மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது!

18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை விரைவுப்படுத்தக் கோரி கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வெளியே அமைதி மறியலில் ஈடுப்பட்டவர்களில்,  8 பேரிடம் காவல் துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.

எனினும், அது ஜானநாயகத்திற்கோ அல்லது பேச்சுரிமைக்கு எதிராகவோ எடுக்கப்படும் நடவடிக்கை அல்ல; 

மாறாக, அமைதிப் பேரணிச் சட்டம் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான SOP மீறலை உட்படுத்தி மேற்கொள்ளப்படும்  விசாரணையே என தேசிய காவல் படைத் தலைவர் தெளிவுப்படுத்தினார்.

 

மாநில சட்மன்றக் கூட்டத்தை நடத்த பினாங்கு அரசாங்கம் அனுமதி கேட்கும்!

அவசர காலம் நடப்பில் உள்ள இக்காலக்கட்டத்தில், மாநில சட்மன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு பினாங்கு அரசாங்கம் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் அனுமதி கோரவிருக்கின்றது.

நாடாளுமன்றம் கூடவில்லை என்றாலும், மாநில ஆளுநர் மூலமாக மாமன்னரிடம் பரிந்துரையை முன்வைத்து சட்டமன்ற கூட்டத்தை நடத்தலாம் என அவசர காலச் சட்டத்தில் இடம்பெற்றிப்பதை முதல் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான 2 நாட்கள் கலந்தாய்வு நிகழ்ச்சியை முடித்து வைத்து உரையாற்றுகையில், முதல் அமைச்சர் Chow Kon Yeow அவ்வாறு சொன்னார்.

சட்டமன்றம் கூடாத காரணத்தால், அரசின் செயல் திட்ட அமுலாக்கம் குறித்த கருத்து பரிமாற்றத்திற்காக அச்சந்திப்பு நடைப்பெற்றது. 

 

மலேசியர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்!

COVID-19 தடுப்பு SOPகளை பின்பற்றுவதில் மலேசியர்கள் மிகுந்த அக்கறையுள்ளவர்களாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது!

UiTMமின் அந்த ஆய்வுப் பற்றி விவரித்த, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob….

குறிப்பாக, சுவாசக் கவசம் அணியும் SOPயை மலேசியர்கள் 96 புள்ளி 7 விழுக்காடு பின்பற்றுகின்றனர்; 

தனிமனித இடைவெளிக்கான SOP பின்பற்றல் 90 விழுக்காடாக இருப்பது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்ததில், ஏறக்குறைய 89 புள்ளி 2 விழுக்காட்டு மலேசியர்களுக்கு COVID-19 தடுப்பு SOPகள் மீதான விழிப்புணர்வு அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

COVID-19 தொற்றில் இருந்து தங்களையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதன் அவசியம் பற்றி மலேசியர்கள் உணர்ந்திருப்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அமைச்சர் சொன்னார்.

மற்றொரு நிலவரத்தில், சமூக நிகழ்ச்சிகளை நடத்தும் போது SOPகளை கட்டாயம் பின்பற்றுமாறு, Datuk Seri Ismail Sabri அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்களோ, பிரபலங்களோ, அரசியல்வாதிகளோ - யாராக இருந்தாலும், SOP மீறல் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர்.

அண்மையில், உள்ளூர் பிரபலம் ஒருவரின் திருமண நிகழ்வில் SOPகள் மீறப்பட்டிருப்பதாக கூறப்படுவதை அமைச்சர் மேற்கோள் காட்டி பேசினார்.

 

வீட்டில் இருந்து வேலை செய்யும் உத்தரவு அகற்றப்படுகிறது!

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO அமுலில் உள்ள பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கான வீட்டில் இருந்து வேலை செய்யும் உத்தரவு நாளை முதல் அகற்றப்படுவதாக அமைச்சர் Datuk Seri Ismail Sabri அறிவித்துள்ளார்.

CMCO பகுதிகளில் உள்ள தனியார் துறைகள் முழு அளவில் இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.


அந்நிய நாட்டு வீட்டுப் பணிப் பெண்கள் மலேசியாவுக்கு திரும்பலாம்!

முறையான வேலை பெர்மிட் வைத்துள்ள அந்நிய நாட்டு வீட்டுப் பணிப் பெண்கள், மலேசியாவுக்கு  திரும்ப அனுமதிக்கப்படுவதாக, Datuk Seri Ismail Sabri தெரிவித்தார்.

விடுமுறைக்காக சொந்த நாடுகளுக்கு திரும்பி, பின்னர், COVID-19 சீற்றம் காரணமாக மலேசிய எல்லைகள் மூடப்பட்டதால், மீண்டும் இந்நாட்டிற்கு திரும்ப முடியாமல் இருக்கும் அந்நிய நாட்டு வீட்டுப் பணிப் பெண்களுக்கு அந்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

 

தண்ணீர் விநியோகத்தை சீராக்கும் நடவடிக்கை!

தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்ட Petaling, கிள்ளான், Shah Alamமில், தண்ணீர் விநியோகத்தை சீராக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக Air Selangor தெரிவித்தது.

புதிய நீர்குழாய்களை பொருத்தும் பணிகள் காரணமாக அப்பகுதிகளில் நேற்று காலை முதல் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோத தடை ஏற்பட்டுள்ளது.


 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather