Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெறும் தண்ணீருக்கு கட்டணம் வேண்டாம்!

Apr 12, 2021


வெறும் தண்ணீருக்கு கட்டணம் விதிப்பதை நிறுத்துமாறு, பயனீட்டாளர் சங்கங்கள், உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களை கேட்டுக் கொண்டுள்ளன!

உணவு மற்றும் இதர வகை பானங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் வாயிலாக உணவகங்களுக்கு வருமானம் கிடைக்கின்றது.

வெறும் தண்ணீருக்கு கட்டணம் வேண்டாம்!

எனவே, தங்களது வாடிக்கையாளர்களுக்கு வெறும் தண்ணீரை இலவசமாக கொடுப்பது தான் நியாயம் என, பினாங்கு மாநில பயனீட்டாளர் சங்கம் NSTயிடம் கூறியிருக்கின்றது.

இவ்வேளையில், வெறும் நீருக்கு 30 சென் கட்டணம் விதிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்; 

அதற்கும் மேற்பட்ட கட்டணம் என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் FOMCA கூறியிருக்கின்றது.

சில உணவகங்கள், வெறும் தண்ணீருக்கு ஒரு ரிங்கிட் வரை கட்டணம் விதிப்பதாக எழுந்த புகார்கள் குறித்து அச்சங்கங்கள் கருத்துரைத்தன.

 

முதலாளிகள் முடிவெடுக்க வேண்டும்!

COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குவது குறித்து மேற்கொண்டு முடிவெடுக்க முதலாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!

மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் MEF அவ்வாறு கூறியிருக்கின்றது.

COVID-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடு கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைவதை உறுதிச் செய்ய, அரசாங்கம் மேற்கொண்டுள்ள COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டியது முதலாளிகளின் கடமையும் கூட என்பதை MEF உணர்ந்துள்ளது.

ஆனால்,  அந்த விடுப்பு சம்பளத்துடன் கூடியதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமை முதலாளிகளிடமே விட்டு விடப்பட வேண்டும் என MEF கேட்டுக் கொண்டது.

வெறும் தண்ணீருக்கு கட்டணம் வேண்டாம்!

தனியார் துறைகளைப் பொறுத்த வரை, ஒரு நாள் விடுப்பு என்பது 904 மில்லியன் ரிங்கிட் செலவினத்தை உட்படுத்தியிருப்பதாக, அச்சம்மேளனம் சுட்டிக் காட்டியது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்லும் தங்களது தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் விடுப்பு வழங்க வேண்டும் என மனித வள அமைச்சு கூறியிருந்தது தொடர்பில் MEF கருத்துரைத்தது.

மற்றொரு நிலவரத்தில், 2ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தில், மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக, அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள MyVac தன்னார்வ தொண்டூழிய திட்டத்திற்கு இதுவரை எட்டாயிரத்து 500 இளையோர்கள் பதிந்துக் கொண்டுள்ளனர்.

அவர்கள், வரும் சனிக்கிழமை தொடங்கி நாடு முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் சேவையாற்றுவார்கள் என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு கூறியுள்ளது.

 

தடுப்பூசி திட்டத்திற்கு ஆயுத்தமாகின்றது சிலாங்கூர்!

2ஆம் கட்ட COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு சிலாங்கூர் தயாராகி வருகின்றது!

2ஆம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அம்மாநிலத்தில் கடைசி நேர ஆயுத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெறும் தண்ணீருக்கு கட்டணம் வேண்டாம்!

தடுப்பூசி போடும் மையங்களாக செயல்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, மாநில Menteri Besar Datuk Seri Amirudin Shari கூறியுள்ளார்.

மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் தவிர்த்து மேலும் சில இடங்கள், தடுப்பூசி போடும் மையங்களாக செயல்படும் என்றாரவர்.

2ஆம் கட்ட தடுப்பூசி திட்டம் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

மொத்தமாக 94 லட்சம் பேர் அத்திட்டத்தின் கீழ் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நாள்பட்ட நோயாளிகள் ஆகியோர் அதிலடங்குவர்.

 

கொரோனா நிலவரம்....

நாட்டில் ஆகக் கடைசியாக பதிவான COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 739ஆக அதிகரித்துள்ளது.

அதில் ஆக அதிகமாக 535 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியிருக்கின்றன.

இன்னும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் மொத்தமாக இன்னும் 343 COVID-19 clusterகள் தீவிரம் குறையாமல் இருக்கின்றன.

வெறும் தண்ணீருக்கு கட்டணம் வேண்டாம்!

நேற்று முன்தினம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான SOPகளை மீறிய குற்றத்திற்காக 208 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 199 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்ட வேளை, 9 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

 

இந்தியாவில் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

உலகளவில் இந்தியாவிலேயே கடந்த இரண்டு வாரங்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

அனைத்துலக அளவில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் ஆறு நோயாளிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்லள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை 1.35 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

வெறும் தண்ணீருக்கு கட்டணம் வேண்டாம்!

இவ்வேளையில், மகாராஷ்டிராவில் புதிய கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா காரணமாக அங்கு 349 பேர் பலியாகியுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather