Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கணபதி விவகாரம் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும்!

Apr 30, 2021


 

கணபதி விவகாரம் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும்!

தடுப்புக் காவலில் இருந்த A.கணபதி என்பவர் மரணமடைந்த விவகாரம் கவலையளிப்பதாக மனிதவள அமைச்சர் Datuk Seri M.Saravanan கூறியுள்ளார்!

தேசியக் காவல் படைத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரைத் தொடர்புக் கொண்டு அது குறித்து விளக்கம் பெறவிருப்பதோடு, அமைச்சரவைக் கூட்டத்திலும் அவ்விவகாரத்தை தாம் எழுப்பவிருப்பதாக முகநூல் பதிவில் அவர் சொன்னார்.

அவ்விவகாரம் குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதை உறுதிச் செய்யும் பொறுப்பு காவல் துறைக்கு இருப்பதாகக் கூறிய Datuk Seri Saravanan, அவ்விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

40 வயது கணபதி தடுப்புக் காவலில் இருந்த போது தாக்கப்பட்டதாகக் கூறி அவரின் குடும்பத்தார் கடந்த மாதம் காவல் துறையில் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

-----

இவ்வேளையில், இரு நபர்கள் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய CCTV பதிவொன்று,  கணபதி மரணத்துடன் தொடர்புடையது எனக் கூறப்படுவதை, Gombak மாவட்டக் காவல் துறைத் தலைவர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்!

சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள அக்காணொளி உண்மையானதா என்பது குறித்தும், அது பதிவான இடம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

எனவே, பொறுப்பற்ற வகையில் அந்த CCTV பதிவைப் பகிர வேண்டாம் என்றும், கணபதி மரணத்துடன் தொடர்புப் படுத்த வேண்டாம் என்றும்  பொது மக்களை அவர் அறிவுறுத்தினார்.

கணபதியின் மரணம், விசாரணையில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

----- 

சிலாங்கூரில் Covid-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மாநில தேசிய பாதுகாப்பு செயற்குழுவுடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அதன் MB Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.
 

நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டிய வேளை, சிலாங்கூரில் மட்டும் நேற்று ஆயிரத்து 83 சம்பவங்கள் பதிவாகின.

---- 

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை EMCO அமுலில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் மற்றும், தொழிற்பயிற்சி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நோன்பு பெருநாளுக்கு சொந்த ஊர் திரும்ப அனுமதி இல்லை!

அப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரிகளிலும் நுழையும் அங்கிருந்து வெளியேறவும் யாருக்கும் அனுமதி இல்லை என தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

----- 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான Exit Polls அதாவது வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், தி.மு.க வே ஆட்சியைப் பிடிக்கும் என கூறுகின்றன!

மு.க Stalin தலைமையிலான திமுக கூட்டணி 160 இடங்கள் வரை வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்குத் திரும்பும் என்றும், ஆளும் அதிமுக 66 தொகுதிகளில் மட்டுமே வென்று எதிர்கட்சியாகும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


234 தொகுதிகளுக்கு April 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather