Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாமன்னரின் கருத்தை மதித்து நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டுவீர்!

Jun 17, 2021


மாமன்னரின் கருத்தை மதித்து நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டுமாறு, எதிர்கட்சிக் கூட்டணியான Pakatan Harapan, அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது!

மாமன்னரின் கருத்தை மதித்து நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டுவீர்!

இனியும் அதில் காலம் தாழ்த்தக் கூடாது என PKR, DAP, AMANAH ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்க நாடாளுமன்றம் விரைவில் கூட வேண்டும் என மாமன்னர் நேற்று கருத்துக் கூறியிருந்தார்.

ஜனவரி மாதம் அவசர காலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் கூடவில்லை.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அவரச காலத்தின் போதும் நாடாளுமன்றத்தைக்கூட்ட வேண்டும் என  அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், கோவிட்19 தொற்று குறைந்து, 80 விழுக்காட்டு கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடையும் இலக்கை நெருங்கும் போது அதாவது செப்டம்பர் வாக்கில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என பிரதமர் முன்னதாக உத்தராவதம் வழங்கியிருந்தார்.  

 

தேர்வெழுதும் மாணவர்களுக்கு தடுப்பூசி!

இவ்வாண்டு SPM மற்றும் STPM தேர்வெழுதவுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடும் பரிந்துரை ஆராயப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்பில் பேசிய, COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin..

 “saya akan cuba sedaya upaya untuk melihat bagaimnaa kita dapat memberikan suntikan kepada pelajar tingkatan 5&6 dan guru terlibat sekurang-kurangnya satu dos sebelum sekolah dibuka, saya melihat amat penting untuk mereka kembali ke sekolah, saya akan bincang dengan CITF dan JKJAV nanti”

அவர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டிய அவசியம் கருதி, குறைந்தப்பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்துவது பற்றி முதலில் ஆராயப்பட்டு வருவதாக அவர் சொன்னார். 

மாமன்னரின் கருத்தை மதித்து நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டுவீர்!

இதனிடையே, COVID-19 தேசிய தடுப்பபூசி திட்டத்தின் கீழ், முன்பதிவு இல்லாமல், walk in முறையில் நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy அதனை தெரிவித்தார்.

என்றாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்கூட்டியே பதிந்துக் கொண்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்த பின்னரே இப்புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்றாரவர்.

 

இரு தடுப்பூசிகள் பயன்படுத்தும் யோசனை!

AstraZeneca தடுப்பூசியை முதல் டோசாக போட்டுக் கொண்டவர்களுக்கு, Pfizer தடுப்பூசியை 2ஆம் டோசாக வழங்கும் அணுகுமுறை ஆராயப்படுகின்றது.

தடுப்பூசிக்கான ஆற்றலை அதிகரிக்க நிறைய நாடுகள் அந்த அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

அந்த அணுகுமுறை தொடர்பில் போதிய தரவுத் தகவல்களை திரட்டி நன்கு ஆராய்ந்த பின்னரே அதில் முடிவெடுக்கப்படும் என்றாரவர்.

இதனிடையே, COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 51 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போட்டு முடிக்கப்பட்டுள்ளன.

நேற்று ஒரு நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுவரை 1 கோடியே 40 லட்சம் பேர் தடுப்பூசி போட பதிந்துக் கொண்டுள்ளனர்.

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather