Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

SPM & STPM மாணவர்களுக்கு COVID-19 தடுப்பூசி போட CITF இணக்கம்!

Jun 18, 2021


 

இவ்வாண்டு SPM, STPM தேர்வெழுதும் மாணவர்களுக்கு COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கல்வி அமைச்சின் பரிந்துரைக்கு, COVID-19 சிறப்பு தடுப்பூசி பணிக்குழு இணங்கியிருக்கிறது.

spm & stpm மாணவர்களுக்கு covid-19 தடுப்பூசி போட citf இணக்கம்!

12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு Pfizer-BioNTech தடுப்பூசியைப் பயன்படுத்த தேசிய மருந்தக ஒழுங்குமுறை நிறுவனம் அனுமதி வழங்கியிருப்பதை கல்வி அமைச்சு மேற்கோள் காட்டியது.

இவ்வேளையில், நாட்டில் ஏறக்குறைய 90 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் தரவுத் தகவலின் படி பார்த்தால், நாட்டில் தற்போது 3 லட்சத்து 57 ஆயிரம் SPM மாணவர்களும், 47 ஆயிரம் ஐந்தாம் படிவ ஆசிரியர்களும் உள்ளனர்.

 

 "mix-and-match" தடுப்பூசி!

ஒரே நபருக்கு இரு வேறு COVID-19 தடுப்பூசிகள் போடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

spm & stpm மாணவர்களுக்கு covid-19 தடுப்பூசி போட citf இணக்கம்!

சில நாடுகள் அந்த அணுகுமுறையை அமுல்படுத்தி விட்டாலும், மலேசியாவில் அதன் தொடர்பில் இன்னும் ஆராயப்பட்டு வருவதாக COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin சொன்னார்.

தடுப்பூசிக்கான ஆற்றலை அதிகரிக்க, AstraZeneca தடுப்பூசியை முதல் டோசாக போட்டுக் கொண்டவர்களுக்கு, Pfizer தடுப்பூசியை 2ஆம் டோசாக வழங்கும் அணுகுமுறை ஆராயப்படுகின்றது.

 

COVID-19: 5,738 புதிய சம்பவங்கள்!

நாட்டில் நேற்று புதிதாக ஐயாயிரத்து 738 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

அதில் ஆக அதிகமாக ஆயிரத்து 858 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

spm & stpm மாணவர்களுக்கு covid-19 தடுப்பூசி போட citf இணக்கம்!

அதற்கடுத்த நிலையில் நெகிரி செம்பிலான் இருக்கின்றது.

அம்மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 86 கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

நெகிரி செம்பிலானில் கொரோனா சம்பவங்கள் 4 இலக்கமாக மாறியதற்கு, சிரம்பானில், தொழிற்துறை ஊழியர்களை உட்படுத்திய இலக்கு வைக்கப்பட்ட கொரோனா தொற்றுப் பரிசோதனைகளே காரணம் என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், Taman Midah Cheras clsuterரில் COVID-19 தொற்றுக்கு ஆளானவர்களில், 4 மாத ஆண் குழந்தையும் அடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கல்வி நிலையம் ஒன்றைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் மாணவர்களை உட்படுத்திய அந்த clusterரின் கீழ் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று  நாட்டில் மொத்தம் 25 clusterகள் அடையாளம் காணப்பட்டன.

அதில் 20 clusterகள் வேலையிடம் தொடர்பானவை

4 clusterகள் சமூகப் பரவலை உட்படுத்தியுள்ளன. 

மேலும் ஒன்று கல்வி நடவடிக்கை தொடர்பான cluster ஆகும்.

 

32 பேருக்கு தண்டம்!

JBயில் உள்ள அரங்கொன்றில், கூட்டமாக சேர்ந்து பூப்பந்து விளையாடி, COVID-19 SOPகளை மீறிய 32 பேருக்கு தலா ஆயிரத்து 500 ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களை அங்கு விளையாட அனுமதித்த அந்த பூப்பந்து அரங்கின் உரிமையாளருக்கு ஈராயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டது.

 

PDRM: கழிவுச் சலுகை!

இன்று தொடங்கி ஜூலை 18ஆம் தேதி வரை, போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டங்களைச் செலுத்த PDRM 50 விழுக்காடு கழிவு வழங்குகிறது.

எனினும், சமிக்ஞையை மீறியது, அவசரப் பாதையை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரதான சாலைக் குற்றங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை உட்படுத்திய குற்றங்களுக்கு அச்சலுகை இல்லை.

PDRMமின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது MyBayar Saman செயலி வாயிலாக அதனைச் செலுத்தலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather