Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Bukit Jalil அரங்கத்தில், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்!

Jun 22, 2021


Bukit Jalil தேசிய விளையாட்டரங்கில் திறக்கப்பட்டுள்ள மாபெரும் COVID-19 தடுப்பூசி மையம், இன்னும் ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும்.

நேற்று முதல் நாள், அம்மையத்தில் ஏறக்குறைய மூவாயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக, COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin கூறினார்.

bukit jalil அரங்கத்தில், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்!

வரும் நாட்களில், அங்கு தடுப்பூசி பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை ஐயாயிரம் பேராகவும், அதன் பிறகு 10 ஆயிரம் பேராகவும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் சொன்னார்.

இவ்வேளையில், COVID-19 தடுப்பூசி கையிருப்புப் பற்றாக்குறை காரணமாகவே, இதற்கு முன், விளையாட்டரங்கம் போன்ற மிகப் பெரிய இடங்களில் COVID-19 தடுப்பூசி மையங்களை அரசாங்கம் திறக்கவில்லை.

அத்தகைய மையங்களை திறக்க எண்ணம் இருந்தாலும், தடுப்பூசி கையிருப்புகள் உறுதிச் செய்யப்பட்ட பின்னரே அதனை திறக்க முடிவெடுக்கப்பட்டதாக Khairy தெரிவித்துள்ளார்.

 “ada yang tanya only now you’re opening up Bukit Jalil,why didn’t you do this a few months ago…we didn’t have the supply.if I opened this up no supply, then the public will say why you are wasting money. Now we have the supply barula kita buka, that’s how we make decisions, once the supply is there baru kita buka ppv. Bukan seolah olah I thought about this yesterday only. We always had a plan to open this ppv only bila bekalan cukup.”

இவ்வளவு நாள் இல்லாமல், இப்போது மட்டும் ஏன் பெரிய அரங்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்படுகின்றன என்ற பொது மக்களில் சிலரது கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

ஒருவேளை தடுப்பூசி கையிருப்புகள் போதிய அளவு இல்லாமல், மையங்களை திறந்தால், வீண் செலவு என்றும் சிலர் விவாதம் செய்வார்கள் என்பதையும் Khairy சுட்டிக் காட்டினார்.

bukit jalil அரங்கத்தில், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்!

Hungary போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு, மலேசியாவில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் மெதுவாக நடைப்பெறுவதாக எழுந்துள்ள குறைகள் தொடர்பிலும் அவர் பேசினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு பகுதியான Hungary போன்ற நாடுகள், பேரளவிலான தடுப்பூசிகளை கொள்முதல் செய்கின்றன; அதோடு, பெரும்பாலான தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும் அவ்வட்டாரத்தை சார்ந்தே இருப்பதால், அங்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

 

12 வயது பிள்ளைகளுக்கான தடுப்பூசி!

12 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய பிள்ளைகள், MySejahtera செயலி வாயிலாக COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துக் கொள்ளலாம்.

bukit jalil அரங்கத்தில், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்!

அச்செயலியில், COVID-19 தடுப்பூசிக்கானப் பகுதியில், தாங்கள் பதியவிருக்கும் நபருடான உறவு முறை குறித்த இடத்தில், child அதாவது பிள்ளை என தேர்ந்தெடுத்து, பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளை தடுப்பூசிப் போட்டுக் கொள்ள பதிந்துக் கொள்ளலாம்.

எனினும், vaccine dependent என்ற பதிவு முறையை, விவேக கைப்பேசிகள் வைத்திருப்போர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

தங்களது பிள்ளையை ஒரு முறை பதிந்து விட்டவர்கள், மீண்டும் வேறொருவரின் MySejahtera செயலி வாயிலாக, அவர்களது பெயரையே மீண்டும் பதிய முடியாது.

பிள்ளைகளை பதிவிடும் அதே நபர், தடுப்பூசி போடும் தினத்தன்றும் பிள்ளையுடன் தடுப்பூசி மையத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மூன்று வாரங்களாகி விட்டது; சம்பவங்கள் குறையவில்லை!

முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் ஆகி விட்ட போதிலும், நாட்டில் COVID-19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறையாமல் பதிவாகி வருகின்றது.

bukit jalil அரங்கத்தில், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்!

அதிலும், சமூகத்தில் எந்த clusterகளுடனும் அறவே தொடர்பில்லாமல், அறிகுறிகளும் காட்டாமல், யாரை வேண்டுமானாலும் தொற்றக் கூடிய கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

அது ஏறக்குறைய 69 விழுக்காடு வரை இருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார். 

சிலாங்கூரை அடுத்து கோலாலம்பூரிலும், சரவாக்கிலும் தான் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.

 

பிறந்தநாள் விழாவில் கொரோனாப் பரவியது!

சபாவில், பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு வாயிலாக COVID-19 புதிய cluster உருவாகியிருக்கின்றது.

bukit jalil அரங்கத்தில், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்!

Serudung Baru என்ற அந்த clsuterரின் கீழ், முதல் நபராக 60 வயது முதியவருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது 19 பேருக்கு அத்தொற்று பரவியிருக்கின்றது.

நேற்று 4 ஆயிரத்து 611 COVID-19 சம்பவங்கள் பதிவாகின; 69 பேர் அத்தொற்றுக்கு பலியாகினர்.

இன்னும் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 16ஆவது நாளாக குறைந்து, 62 ஆயிரத்து 918ஆக இருக்கின்றது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather