Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாணவர்களுக்கு தடுப்பூசி அவசியமாகின்றது!

Jun 24, 2021


தேர்வெழுதவுள்ள மாணவர்கள், இவ்வாண்டு பள்ளிகளுக்குத் திரும்பும் முன்னர் அவர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடுவது அவசியமாகின்றது!

இதன் வழி, மாணவர்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி நேரடி வகுப்புகளுக்குச் செல்வார்கள் என தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க மன்றம் PIBGN தலைவர் இணைப் பேராசிரியர் Datuk Dr Mohamad Ali Hasan கருதுகின்றார். 

மாணவர்களுக்கு தடுப்பூசி அவசியமாகின்றது!

மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முறைக் குறித்த ஆலோசனையையும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

மாணவர்களை உட்படுத்திய தடுப்பூசி பணிகளுக்கு, நடமாடும் தடுப்பூசி மையங்களைப் பள்ளிகளுக்கு அனுப்பலாம்.

அல்லது தடுப்பூசி பணியாளர்கள் நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட உதவலாம் என அவர் கூறினார்.

SPM மற்றும் STPM மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை, அடுத்த மாதம் தொடங்கும் என COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin முன்னதாக கூறியிருந்தார்.

 

மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்!

நாட்டில் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றது!

மாணவர்களுக்கு தடுப்பூசி அவசியமாகின்றது!

நேற்று மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்து 773 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதல் டோசைப் பெற்றுக் கொண்டனர்.

78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோசைப் போட்டு முடித்தனர்.

 

மேலும் செய்திகள்........

பொய் தகவல் பரப்பிய மருத்துவருக்கு தண்டம்!

கடந்த ஏப்ரலில், Sinovac தடுப்பூசி குறித்து போலியான தகவல் பரப்பிய பெர்லீஸ் கங்காரைச் சேர்ந்த மருத்துவருக்கு ஐயாயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடையே பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொய்யானத் தகவலை பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

 

COVID-19 மருத்துவமனையாக மாறியது Ampang மருத்துவமனை!

சிலாங்கூரில், Sungai Buloh மருத்துவமனையை அடுத்து தற்போது Ampang மருத்துவமனையும், முழுக்க முழுக்க COVID-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்றாம் கட்டம் மற்றும் அதற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே அதற்கு காரணம் என மாநில சுகாதாரத் துறை கூறியது.

 

Hybrid முறையில் நாடளுமன்றம் தொடங்கலாம்!

தேவை ஏற்பட்டால், நாடாளுமன்றம் எந்நேரத்திலும் hybrid முறையில் அதாவது நேரில் சிலரும், இயங்கலை வாயிலாக மற்றவர்களும் கூடலாம்!

அதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எனினும், மக்களவை மீண்டும் ஒன்றுக்கூடுவதற்கான குறிப்பிட்ட தேதி என்று இதுவரை எதுவும் இல்லை என அவர் சொன்னார்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் 28 நாட்கள் இருக்கும் போது அதற்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கின்றது.

 

பிலிப்பின்ஸ்  முன்னாள் அதிபர் காலமானார்!

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் Benigno Aquino தனது 61ஆவது வயதில் காலமானார்.

அவர் 2010 தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை, பிலிப்பின்சின் 15ஆவது அதிபராக பதவி வகித்தார்.

அவரின் தாயார் மறைந்த Corazon Aquino, ஆசியாவின் முதல் பெண் அதிபர் ஆவார்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather