Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

PEMULIH திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

Jun 28, 2021


pemulih திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான PEMULIH எனும் மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சித் திட்டத்தை இன்று அறிவித்தார்.

அத்திட்டத்தின் கீழ் Covid-19 பரவலால் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு Covid-19 சிறப்பு உதவிநிதி வழங்கப்படுகிறது.

அவ்வகையில் மிகுந்த வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஆயிரத்து 300 ரிங்கிட் கட்டங் கட்டமாகக் கொடுக்கப்படும் என பிரதமர் சொன்னார்.

“Isi rumah kategori miskin tegar bakal menerima bantuan sebanyak 500 ringgit pada bulan Ogos, 500 ringgit pada bulan November, dan 300 ringgit pada bulan Disember”

B40 தரப்பினருக்கு 800 ரிங்கிட்டும் M40 தரப்பினருக்கு 250 ரிங்கிட்டும் வழங்கப்படும்.  

இவ்வேளையில் இவ்வாண்டில் வருமானம் இழந்தவர்கள், ஊழியர் சேமநிதி வாரியம், PERKESO ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 500 ரிங்கிட் பெறுவர்.

pemulih திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!இதனிடையே B40, M40, T20 தரப்பினருக்கு இயல்பாகவே ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

ஜூலை 7 ஆம் தேதி முதல் அந்த moratorium சலுகைக்கு   விண்ணப்பிக்கலாம் என பிரதமர் தெரிவித்தார்.

"Moratorium enam bulan akan diberikan kepada semua peminjam individu, sama ada dari golongan B40, M40 atau T20, dan usahawan mikro. Tiada lagi syarat seperti pengurangan pendapatan, tiada semakan sama ada anda telah hilang pekerjaan dan tiada lagi dokumentasi yang perlu dikemukakan untuk permohonan. Anda Cuma perlu memohon dan kelulusan akan diberikan secara automatic”

இவ்வேளையில், PTPTNனிடம் இருந்து கடன் பெற்றவர்களுக்கு மூன்று மாத காலத்திற்கு இலக்கு வைக்கப்பட்ட moratorium கொடுக்கப்படும்.

pemulih திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

இதனிடையே ஊழியர் சேமநிதி வாரியம் EPF, மாதத்திற்கு ஆயிரம் ரிங்கிட் என ஐயாயிரம் ரிங்கிட் வரை சந்தாதாரர்கள் சேமிப்புப் பணத்தை மீட்க வகை செய்யும் i-Citra திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. 

அதற்கு ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி விண்ணப்பிக்கலாம்.  

pemulih திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 65 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிந்து கொண்டுள்ளனர்.

இவ்வேளையில், நாடு முழுவதும் இதுவரை 73 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

20 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

pemulih திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐயாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது.

புதிதாக ஐயாயிரத்து 218 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 989 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather