Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முகிதின்-னின் விலகல் தடுப்பூசி திட்டத்தை பாதிக்காது!

Aug 17, 2021


 

முகிதின்-னின் விலகல் தடுப்பூசி திட்டத்தை பாதிக்காது!

Tan Sri Muhyiddin Yassin தலைமையிலான Perikatan Nasional அரசாங்கம் கவிழ்ந்திருப்பது, கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காது!

அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான Khairy Jamaluddin அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், அதனை வழி நடத்த இன்னபிற வழிகள் இருப்பதால் பொது மக்கள் கவலை அடைய தேவையில்லை எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர், Edwin Michael.

" ஒருங்கிணைப்பாளர் இல்லாத சமயத்தில், ஒரு அமைச்சு இந்த தடுப்பூசி திட்டத்தை ஏற்று நடத்தலாம். உதாரணமாக சுகாதார அமைச்சு. அமைச்சரவை இல்லாவிட்டாலும், அமைச்சின் கீழுள்ள செயலாளர் உள்ளிட்ட தரப்பு அத்திட்டத்தை தாராளமாக ஏற்று நடத்தலாம்''என்றாரவர்.

ஒரே வித்தியாசம் முன்பு ஒரு கண்காணிப்பாளர் தலைமை வகித்தார்; தற்போது அவர் இல்லாமல் அந்நடவடிக்கைகள் தொடரும். மற்றபடி ஏற்கனவே வரைந்து வைத்துள்ள விதிமுறைகளையும் யுக்திகளையும் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அமைச்சுகளே அத்திட்டத்தை சரியான வழி தடத்தில் கொண்டு செல்ல முடியும்" என அவர் மேலும் சொன்னார்.

பிரதமர் பதவியிலிருந்து Muhyiddin விலகியதால் அரசியலமைப்புச் சட்ட படி, அவரது அமைச்சரவையும் இயல்பாகவே கலைந்தது.

இதையடுத்து அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சருமாக இருந்த Khairy-யால் தேசிய தடுப்பூசி திட்டத்தை தொடர்ந்து வழி நடத்த முடியாமல் போனது.

என்றாலும் பொது மக்கள் இது குறித்த கவலையடைய வேண்டாம் என தெரிவித்த Edwin, இலக்கு வைக்கப்பட்டது போல, இம்மாத இறுதிக்குள் நாட்டின் ஐம்பது விழுக்காட்டு பெரியவர்களுக்குத் தடுப்பூசியைப் போட்டு முடிக்க முடியும் என எதிர்ப்பாக்கலாம் என்றார்.

Perikatan அரசாங்க ஏற்கனவே 87 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முன்பதிவு செய்து விட்டதால், தடுப்பூசி கையிருப்பு குறித்த கவலை பொது மக்களுக்கு வேண்டாம் என முகிதீன் முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், அதிகாரத்தில் இருந்த 17 மாதங்களும் Perikatan அரசாங்கம் முடிந்தளவு நாட்டுக்கும் மக்களுக்கும் செய்திருப்பதை மறுக்க முடியாது என்கிறார் Edwin .

கோவிட் 19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வந்த அவ்வரசாங்கம் வேலையிழந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு வழங்கிய உதவி நிதிகள் காலத்திற்கேற்றவையாக அமைந்ததாகக் கூறுகிறார், 

மக்கள் பரிவுமிகு உதவித் திட்டம், Moratorium சலுகை, i-Sinar, i- Citra என பல்வேறு திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தது.

இவை அனைத்துமே முழுமையாக மக்கள் சுமையைத் தீர்க்கவில்லை என்றாலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த உதவிகள் பெரிதும் உதவியிருப்பது மறுக்க முடியாது ஒன்று என்றார்.
 

அது போக கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டம் Perikatan Nasional அரசாங்கத்தின் மிகப்பெரிய வெற்றி என்றாரவர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather