Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவது பாதிக்கப்படாது!

Sep 17, 2021


பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவது பாதிக்கப்படாது!Covid-19 தடுப்பூசிகளை போட்டு முடிக்காதவர்கள், பொழுதுபோக்குத் தளங்களில் இருந்து வெளியேற உத்தரவிடப்படுவர்.

தர செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய, மக்கள் அதிகம் திரளும் அனைத்து கேளிக்கைப் பகுதிகளிலும் கண்காணிப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறை நினைவுறுத்தியது.

இவ்வேளையில், Gombak, Sungai Pisang அருவிப் பகுதியில் தர செயல்பாட்டு நடைமுறையை மீறிய எழுவருக்கு தண்டம் விதிக்கப்பட்டது. 

அவர்களில் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவில்லை என காவல் துறை கூறியது.

பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவது பாதிக்கப்படாது!

கிள்ளான் பள்ளத்தாக்கில் மக்கள் கூடும் பகுதிகளில் SOP பின்பற்றல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படவிருப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சு தெரிவித்திருக்கிறது.

ரகசிய கேமராக்கள், ஒலி பெருக்கிகள், அவசர சமிக்ஞை பட்டன்கள் பொருத்தப்படுவதோடு குறிப்பிட்ட இடங்களில் அமலாக்கப் பணியாளர்களும் ரோந்து வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அது கூறியது.

கிள்ளான் பள்ளத்தாக்கு கடந்த வாரம் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்த நிலையில், பல பொழுதுபோக்குத் தளங்களில் மக்கள்  அதிகமாகக் காணப்படும் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகி வருகின்றன.  

பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவது பாதிக்கப்படாது!

Covid-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள சில ஆசிரியர்கள் மறுத்து வருவது, அடுத்த மாதம் பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவதைப் பாதிக்காது.

மொத்தமுள்ள நான்கு லட்சத்து 14 ஆயிரம் ஆசிரியர்களில் இதுவரை 89 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்தது. 

சிறிய எண்ணிக்கையாக சுமார் ஈராயிரத்து 500 ஆசிரியர்கள் மட்டுமே   தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வருகின்றனர். 

பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவது பாதிக்கப்படாது!

பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்கு இன்னும் இரு வாரங்களில் திறக்கப்படும் நிலையில், லபுவானில் இதுவரை ஈராயிரத்து 400க்கும் அதிகமான நான்கு மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்ட ஈராயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்களில் அவர்கள் 94 விழுக்காட்டினர் என லபுவான் தடுப்பூசி சிறப்புப் பணிக்குழு கூறியது.

இதனிடையே 12டில் இருந்து 15 வயது சிறார்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம், சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்ததும் தொடக்கப்படும் என அது மேலும் தெரிவித்தது.

பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவது பாதிக்கப்படாது!

தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் உள்ள மாநிலங்களில் gym உடற்பயிற்சி மையங்களை மீண்டும்  திறப்பது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவைப் பொருத்தே அமையும்.

அதற்குரிய SOPக்களை MKNனிடம் அனுப்பி வைத்து விட்டதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு கூறியது.

SOPக்கள் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே gym உடற்பயிற்சி மையங்கள் செயல்படும் என அது தெளிவுபடுத்தியது.

பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுவது பாதிக்கப்படாது!லங்காவி தீவுக்குச் சுற்றுலா செல்ல முயன்ற ஐவருக்கு Covid-19 பீடித்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவ பரிசோதனையின் போது அது தெரிய வந்ததாகவும் 10 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather