Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளம் ஏறிய சாலைகளில் பயணிக்க வேண்டாம்!

Jan 04, 2021


வெள்ளம் ஏறிய சாலைகளில் பயணிக்க வேண்டாம் என Bukit Aman, வாகனமோட்டிகளை அறிவுறுத்தியிருக்கின்றது.

வெள்ள நீரோட்டத்தின் வேகம், அதனால் ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, வாகனமோட்டிகள் தங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என Bukit Aman கேட்டுக் கொண்டது.

முடிந்த வரை, அவசர - அவசிய தேவை இல்லாவிட்டால், வீட்டிலேயே இருக்குமாறும் அத்துறை பொது மக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கின்றது.

சில வாகனமோட்டிகள் வெள்ளத்தினூடே பயணிக்க முயற்சித்து, நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை Bukit Aman சுட்டிக் காட்டியது.

வெள்ளம் மோசமடைகின்றது!

ஐந்து மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஜொகூரிலும், பகாங்கிலும் வெள்ளம் மோசடைந்திருக்கின்றது.

அவ்விரு மாநிலங்களிலும் தற்போது 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஜொகூரில், Batu Pahat, Johor Bahru, Kota Tinggi, Kluang, Mersing, Pontian, Kulaijaya,  Segamat உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பகாங்கில் Jerantut, Kuantan, Maran, Temerloh, Lipis, Pekan, Rompin ஆகியப் பகுதிகளில் வெள்ளம் நீடிக்கின்றது.

திரங்கானுவில், Dungun மற்றும் Kemamanனில் சுமார் 222 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், வெள்ளம் மற்றும் கனமழையை அடுத்து, பகாங் மற்றும் ஜொகூரில் ஏறக்குறைய 91 துணை மின்நிலையங்களின் மின்சார சேவையை, TNB தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

நிலைமை சீரடைந்த பின்னரே, மின்சார வசதி மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பும் என கூறிய TNB, வெள்ளத்தின் போது மின்னியல் உபகரணங்களை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொது மக்களுக்கு ஆலோசனை கூறியது.

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டம்!

அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும், COVID-19 தொற்றுக்கான தேசிய தடுப்பூசி திட்டம் வரும் வியாழக்கிழமை இறுதிச் செய்யப்படும் என, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தடுப்பூசி மீதான மருத்துவச் சோதனை ஏற்கனவே செய்யப்பட்டு தான் அது விநியோகிக்கப்படுகின்றது என்பதால், மீண்டும் அதனை சோதிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அமைச்சு கூறியது.

இவ்வேளையில், நாட்டில் புதிதாக பதிவான ஆயிரத்து 704 COVID-19 சம்பவங்களில் மிக அதிகமாக 673 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியிருக்கின்றன.

இன்னும் ஏறக்குறைய 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

2 தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி!

1 கோடி பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், அவசர பயன்பாட்டுக்கு, 2 தடுப்பூசிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருக்கிறது.

அந்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இந்திய அரசு இலக்கு வைத்திருக்கிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather