Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நாட்டின் வெள்ள நிலவரம்!

Jan 06, 2021


பஹாங்கில் வெள்ள நிலவரம் தொடர்ந்து மோசமாகவே இருக்கிறது.

ஆகக் கடைசி நிலவரப்படி, 9 மாவட்டங்களில் கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் துயர் துடைப்பு மையங்களில் இருக்கின்றனர்.

மற்றொரு நிலவரத்தில் பஹாங்கில் சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால், TNB நிறுவனம் 156 மின் கோபுரங்களின் இணைப்பைத் தற்காலிகமாகத் துண்டித்துள்ளது.

அதனால் மூவாயிரத்து 700க்கும் மேற்பாட்டோருக்கான மின் விநியோகம் தடைபட்டுள்ளது.

திரங்கானு, Dungunனில் மீண்டும் வெள்ள நீர் ஏறியுள்ளதால், கிட்டதட்ட 160 பேர் தற்காலிக மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அம்மாவட்டத்தில் இரு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Kemamanனிலும் வெள்ளம் காணப்படுகிறது.

ஜொகூரில் இன்று காலை வெள்ளம் சற்று சீரடைந்துள்ளது.

அம்மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்து 500க்கு இறங்கியுள்ளது.

முன்னதாக அவ்வெண்ணிக்கை நாலாயிரத்து 200க்கும் கூடுதலாக இருந்தது.

கிளந்தான், பேரா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் தற்காலிக மையங்களில் உள்ளனர்.

கிளந்தானில் ஆரஞ்சு நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, திரங்கானு, பஹாங், சபா ஆகிய ஏழு மாநிலங்களில் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இன்று முழுவதும் இடைவிடாத கன மழை பெய்யும் வானிலை ஆய்வுத்துறை எச்சரித்தது.

நாட்டில் சில மாநிலங்களில் குறிப்பாக கிழக்குக் கரையில் தற்போது காணப்படும் வெள்ளம், இதற்கு முன் ஏற்பட்டதை விட மோசமாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை ஆய்வுத்துறையின் நிர்வாக இயக்குனர் Jailan Simon அவ்வாறு கூறியிருக்கிறார்.

“Kita tidak menjangkakan keadaan sebesar 2014 atau 2013 di kemaman, begitu juga di Johor banjir sebesar 2006 dan 2007, so tahun ini lebih kurang biasa la bagi negeri negeri di Pantai timur. Cuma di Pahang besar sedikit”

தீபகற்பத்தில் வெள்ளத்தை ஏற்படுத்தும் மோசமான வானிலை இம்மாதத்தின் மூன்றாவது வாரம் வரை நீடிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

சிவப்பு மண்டலப் பகுதிகளில் இருந்து மாநிலம் விட்டு மாநிலம் அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள், தன்னார்வ முறையில் Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து சுகாதார அமைச்சு மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.

“3 hari sebelum kita keluar daripada Kawasan kita, kalau kita daripada kawasan merah di KL misalnya nak pergi ke Pahang, kitab oleh test diri kita dulu, ataupun kalau kita pergi daripada Kawasan hijau ke Kawasan merah, apabila kita nak balik mungkin untuk menjaga keselamatan keluarga kit akita boleh buat ujian sarigan secara sukarela.”

கடந்த மாதத் தொடக்கத்தில் பயணக் கட்டுப்பாடுகள் மீட்டுக் கொள்ளப்பட்டதால், பல புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டதைச் சுட்டிக் காட்டி அமைச்சர் அவ்வாறு கூறினார்.

முதலாளிகள் கட்டாய Covid-19 மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப மறுத்தால், அவர்களிடம் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.

அதோடு அவ்விதிமுறையை மீறும் முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது நினைவுறுத்தியது.

PLUS நெடுஞ்சாலையில் வாகனங்களின் பின்னாள் அமர்ந்து செல்வோர் பாதுகாப்பு வார்ப்பட்டையை அணியாவிட்டால், ஒருவருக்கு 300 ரிங்கிட் அபராதமும் இருவருக்கு 600 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும் என WhatsAppப்பில் பரவியுள்ள தகவலை Bukit Aman மறுத்திருக்கிறது.

அவ்வாறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather