Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஈராயிரத்திற்கும் அதிகமான கொரோனா சம்பவங்கள்!

Jan 06, 2021


நாட்டில் இன்று புதிதாக ஈராயிரத்து 593 COVID-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதில் ஆக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில், தொள்ளாயிரத்து 65 சம்பவங்கள் பதிவான வேளை, ஜொகூரில் 571 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கடுத்து சபாவில் 405 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று மேலும் 4 மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், மரண எண்ணிக்கை 513 ஆக அதிகரித்துள்ளது.


விதிமுறை மீறல்...194 பேர் கைது!

COVID-19 மீதான SOPகளை மீறியதற்காக நேற்று மட்டும் நாட்டில் 194 பேர் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, JB, Taman Perindustrian Tampoi Jayaவிலுள்ள Westlite தொழிலாளர் தங்குமிடத்திற்கான கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றது.


தடுப்பூசி செலவுகளை முதலாளிகள் ஏற்க வேண்டும்!

தங்களது அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கான COVID-19 தடுப்பூசி செலவுகளை முதலாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

COVID-19 பரிசோதனைக்கான செலவும் அதிலடங்கும் என மனித வள அமைச்சர் Datuk Seri M Saravanan தெரிவித்துள்ளார்.

அத்தொற்றுப் பரவல் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க அந்நிய நாட்டு தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களை அரசு அதிகாரிகள் கண்காணித்து, சோதனை நடத்த தொடங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.


அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோக தடை!

Shah Alam, Klang மற்றும் Petalingகில், ஏறக்குறைய 36 இடங்களில்  இம்மாதம் 12ஆம் தேதி அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை ஏற்படும் என Air Selangor தெரிவித்துள்ளது.

Persiaran Selangor Seksyen 15தில், பழைய நீர்குழாயை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

தண்ணீர் மீண்டும் ஜனவரி 14ஆம் தேதி காலை 9 மணிக்கு வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக Air Selangor கூறியுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather