Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

5 மாநிலங்களிலும் 3 கூட்டரசு பிரதேசங்களிலும் MCO!

Jan 11, 2021


Credit: The Star

வரும் புதன்கிழமையில் இருந்து நாட்டில் சில மாநிலங்களில்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.

சம்பந்தப்பட்ட இடங்களில் ஜனவரி 13 ஆம் தேதியில் இருந்து இரு வாரங்களுக்கு MCO அமலில் இருக்கும் என பிரதமர் இன்று அறிவித்தார்.

மேலும் விவரித்த Tan Sri Muhyiddin Yassin…

“Pertama, PKP ke atas enam (6) buah negeri iaitu Pulau Pinang, Selangor, Wilayah Persekutuan (Kuala Lumpur, Putrajaya dan Labuan), Melaka, Johor dan Sabah. Kedua, PKP Bersyarat (PKP-B) ke atas enam (6) buah negeri iaitu Pahang, Perak, Negeri Sembilan, Kedah, Terengganu dan Kelantan. Ketiga, PKP Pemulihan (PKP-P) pula akan dilaksanakan bagi negeri Perlis dan Sarawak dan akan diteruskan sepanjang tempoh tersebut”

அக்காலக் கட்டத்தில், நாடு முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் கடக்க முடியாது.

MCO அமலில் உள்ள மாநிலங்களில் மாவட்டங்களையும் கடக்க முடியாது.

இவ்வேளையில் Covid-19 தொற்று சங்கிலியாகத் தொடர்வதைத் தடுக்க, திருமணங்கள், மாநாடுகள், தைப்பூசம் உள்ளிட்ட சமய ஊர்வலங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், குழு விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என பிரதமர் சொன்னார்.

Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஈராயிரத்து 232 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

சிலாங்கூரில் மிக அதிகமாக 557 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

அடுத்து மிக அதிகமான சம்பவங்கள் ஜொகூர், சபா, KL ஆகியவற்றில் கண்டறியப்பட்டன.

மேலும் நால்வர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியானதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 555 ஆக உயர்ந்துள்ளது.

அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

அதே சமயம் அனைத்து அமைச்சர்களும்  அக்கிருமி பாதிப்பு மீதான இடர்  மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் Datuk Seri Rina Harun, பிரதமர்  துறையின் பொருளாதாரப் பிரிவு அமைச்சர் Datuk Seri Mustapa Mohamed ஆகியோருக்கு Covid-9 உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   

Pfizer நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக ஒரு கோடியே 20 லட்சம் Covid-19 தடுப்பூசிகளைப் பெற அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கிறது.

அந்நிறுவனத்துடன் அத்தடுப்பூசிக்கான தயாரிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் சுகாதார அமைச்சு கையெழுத்திட்டுள்ள நிலையில், அது அவ்வாறு கூறியுள்ளது.

இதனிடையே, சிலாங்கூர் அரசு அம்மாநில மக்களுக்காக 50 லட்சம் Covid-19 தடுப்பூசிகளைப் பெறத் திட்டமிட்டுள்ளது.

அதே சமயம் அந்நியத் தொழிலாளர்கள் உட்பட தொழில்துறைப் பணியாளர்களில் பலருக்கு அத்தடுப்பூசியை வழங்கவும் அது உத்தேசித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று வரை 8 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமான அந்நியத் தொழிலாளர்களில் சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேருக்கு Covid-19 மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னும் தங்களது அந்நியத் தொழிலாளர்களை அப்பரிசோதனைக்கு அனுப்பாத முதலாளிகள் உடனடியாக அவ்வாறு செய்வது நல்லது என SOCSO கூறியது. 

பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் துறை மறுத்துள்ளது.

அவர் புற்றுநோயில் இருந்து விடுபட்டு விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக அது கூறியது.

அதே வேளை, துணைப்பிரதமர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள தகவலும் உண்மையில்லை என அது தெளிவுபடுத்தியது.

வானிலை ஆய்வுத்துறை ஆறு மாநிலங்களில் வானிலை அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பஹாங்கில் Maran, Kuantan, Bera, Pekan, Rompin, ஜொகூரில் Segamat, Kluang, Mersing, Pontian, Kulai, Kota Tinggi, JB,  கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் நாளை வரை கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

சபா, சரவாக் மாநிலங்களில் சில பகுதிகளிலும் அதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

அவ்வெண்ணிக்கை தற்போது சுமார் 23 ஆயிரத்து 500க்குக் குறைந்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather