Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

AKPK-வின் ஆலோசனைக்கு பணம் தேவையில்லை!

Feb 01, 2021


வங்கிக் கடன்களுக்கான Moratorium சலுகை குறித்த ஆலோசனைகளுக்கு, நிதி ஆலோசணை மற்றும் கடன் நிர்வகிப்பு நிறுவனமான AKPK, பொது மக்களுக்கு எந்த வித கட்டணத்தையும் விதிக்காது!

எனவே, AKPK-வின் முகவர்கள் எனக் கூறிக் கொண்டு யாராவது தொலைப்பேசியில் அழைத்து, ஆலோசனைக்கு கட்டணம் செலுத்துமாறு கேட்டால், அதனை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என AKPK -வின் குடும்ப நிதி நிர்வாகக் கல்வி பிரிவுத் தலைவர் நிர்மலா சுப்பிரமணியம் நினைவுறுத்தினார்.

Moratorium சலுகைக்கான விண்ணப்பங்களை தாங்களே நேரடியாக அங்கீகரித்துக் கொடுப்பதாகவும், அதற்கு குறிப்பட்ட தொகையை கமிஷனாக கொடுக்க வேண்டுமென்றும் கூறி  பணம் பறிக்கும் சம்பவங்கள் இதற்கு முன் நிகழ்ந்திருப்பதாக நிர்மலா கூறினார்....

AKPKவின் இணையத் தளத்தில் விண்ணப்பிக்காமல், ஒருவரை moratorium சலுகை குறித்த ஆலோசனையை வழங்குவதற்காகத் தமது தரப்பு அழைக்காது என குறிப்பிட்ட நிர்மலா, AKPK அல்லது வங்கி அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு தொலைபேசி வாயிலாகப் பணம் பறிக்கும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

_____

Kuala Lumpur, Putrajaya மற்றும் Labuan-னிலுள்ள குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகின்றது!

MyBeras@Wilayah திட்டத்தின் கீழ் கூட்டரசு பிரதேச அமைச்சு ஒவ்வொரு வாரமும் அந்த உதவியினை வழங்கும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்தார்.

Covid-19 தாக்கத்தினால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியைக் கையாள்வதற்கும், அவர்களது அன்றாட வாழ்க்கைச் செலவீனத்திற்கு உதவும் விதமாகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சொன்னார்.

மக்களின் நல்வாழ்வுக்காக MYJobs@Wilayah, MYGrocer@Wilayah, MYSchoolBus@Wilayah, உள்ளிட்ட மேலும் சில திட்டங்களையும் அமைச்சு கொண்டு வந்துள்ளதாக, இன்று அனுசரிக்கப்படும் கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு உரையாற்றிய போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

_______

இதனிடையே கோலாலம்பூரில் வறுமை கோட்டுக்குக் கீழுள்ள சுமார் 30 ஆயிரம் குடும்பங்களை கூட்டரசு பிரதேச அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தலைநகரைச் சுற்றி 178 இடங்களில் வசித்து வருவதாக அமைச்சர் Tan Sri Annuar Musa தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் ஈராயிர்த்து 200 ரிங்கிட்டுக்கும் குறைவாக மாத வருமானம் ஈட்டுவோர் என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டார்.

_______

வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த உயர்கல்வி கழக மாணவர்கள், தங்களின் உயர்கல்வி கூடத்திற்குச் சென்று கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்கள், MUET தேர்வெழுதுவோர் உள்ளிட்ட ஆறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி கழக வளாகங்களுக்கு வந்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சும், சுகாதார வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்து பேசிய பிறகே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அமைச்சு உறுதிப்படுத்தியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather