Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

CMCO, RMCO மீதான அறிவிப்பு!

Apr 12, 2021


cmco, rmco மீதான அறிவிப்பு!

சிலாங்கூர், KL, ஜொகூர், பினாங்கு, மற்றும் கிளந்தானில் அமலில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO இம்மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

சரவக்கில் CMCO வரும் 13 ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி வரை நீடிக்கும்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனை அறிவித்தார்.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள பெர்லிஸ், கெடாவில் Kuala Mudaவைத் தவிர்த்தும், நெகிரி செம்பிலானில் சிரம்பானைத் தவிர்த்தும், பேரா, மலாக்கா, பஹாங், திரங்கானு, சபா, Putrajaya, லபுவானில் RMCO 15 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

cmco, rmco மீதான அறிவிப்பு!

மாநில எல்லைகளைக் கடக்க விதிக்கப்பட்டுள்ள தடை நிலை நிறுத்தப்படுகிறது.

ஆயினும் RMCO மாநிலத்தில் இருந்து மற்றொரு RMCO மாநிலத்திற்கு சுற்றுலா நோக்கத்திற்காகப் பயணிக்க முடியும்.

cmco, rmco மீதான அறிவிப்பு!

ரமலான் மாதத்தில் மட்டும் அனைத்து உணவகங்கள், உணவுக் கடைகள், அங்காடிக் கடைகள், துரித உணவுக் கடைகள் ஆகியவை காலை 6 மணி வரை அல்லது லைசன்ஸ் விதிமுறைபடி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

cmco, rmco மீதான அறிவிப்பு!

நாட்டில் புதிதாக ஆயிரத்து 317 பேருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சரவாக்கில் மிக அதிகமாக 351 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்து சிலாங்கூரில் மிக அதிகமாக 303 சம்பவங்களும் KL, பினாங்கு மற்றும் சபாவில் தலா நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் நால்வர் Covid-19னால் உயிரிழந்துள்ளனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

cmco, rmco மீதான அறிவிப்பு!

இரண்டாம் கட்ட தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டவர்களில் கிட்டதட்ட 32 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  தடுப்பூசி போடும் தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளரான Khairy Jamaluddin அதனைத் தெரிவித்திருக்கிறார்.

அவர்களில் பாதிக்கும் குறைந்தவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்ல ஒப்புதல் அளித்துள்ளனர்.

மற்றவர்கள் நிராகரித்துள்ளனர் அல்லது இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான அவர் சொன்னார்.  

“13,218 telah menjawab mereka akan hadir, yes mereka akan hadir, manakala 343 telah menjawab mereka tidak akan hadir jadi jumlah yang tidak akan hadir ini sangat kecil, cuma yang belum jawab lagi adalah 18,215 ataupun 57 peratus, 42 peratus telah kawab mereka akan hadir, 57 peratus tidak memberi apa apa jawapan.”

எனவே தடுப்பூசி போட கொடுக்கப்பட்டுள்ள தேதி குறித்து இன்னும் முடிவு செய்யாதவர்கள் விரைந்து தங்களது பதில்களைத் தெரியப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

cmco, rmco மீதான அறிவிப்பு!

Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு Sinovac தடுப்பூசி போடப்படலாம் என தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்திருக்கிறார்.

Sinovac தடுப்பூசி வயதானவர்களுக்குப் போட பாதுகாப்பாகவும் ஆக்ககரமாகவும் இருப்பது ஆகக் கடைசி தரவுகளின் வழி தெரிய வந்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான அவர் சொன்னார்.

துருக்கி, பிரேசில், Chile ஆகிய நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Sinovac தடுப்பூசி போடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

cmco, rmco மீதான அறிவிப்பு!

MyBayar Saman செயலி வழி சம்மன் செலுத்துவோருக்கு வழங்கப்படும் 50 விழுக்காட்டு கழிவுச் சலுகை நீட்டிக்கப்படுகிறது.

அச்செயலியைப் பயன்படுத்தி சம்மன் செலுத்துவோரிடம் இருந்து  பேராதரவு கிடைத்து வருவதை அடுத்து அச்சலுகை வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக Bukit Aman தெரிவித்தது.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி தொடக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை MyBayar Saman மூலம் சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் சம்மன்களை உட்படுத்திய 7 கோடியே 33 லட்சம் ரிங்கிட் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறியது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather