Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

May 03, 2021


கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்திற்குக் குறைந்துள்ளது.

புதிதாக ஈராயிரத்து 500 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக 637 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

கிளந்தான் மற்றும் சரவாக்கிலும் கூட அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மேலும் 18 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது.

கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

கடந்த மாதத்தில் இருந்து மாநில எல்லையைக் கடந்து சென்றது காரணமாக அமைந்த 13 Covid-19 clusterகள் கண்டறியப்பட்டன.

சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba அத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

கிளந்தானில் தென் ஆப்பிரிக்காவின் உருமாறிய Covid-19 கிருமித் தொற்று அடையாளம் காணப்பட்ட Bunut Sarang Burung clusterரும் அதில் அடங்கும் என அவர் சொன்னார்.   

“Untuk itu, aktiviti ataupun kegiatan merentas negeri masih dikekalkan untuk tidak diadakan sehinggalah 17 haribulan lima dan juga seingga tarikh baru diumumkan"

இவ்வேளையில் சிலாங்கூர் மற்றும் KLலிலும் கூட மாநிலம் கடந்ததால் அதிகமான clusterகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

AstraZeneca Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தன்னார்வ முறையில் முன் பதிவு செய்து கொண்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் தேதி குறித்து இன்று முதல் கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும். 

மற்றொரு நிலவரத்தில், AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்ள தன்னார்வ முறையில் முன் பதிவு செய்தவர்கள், தடுப்பூசி போட வழங்கப்படும் தேதியைப் பிறரிடம் கொடுக்க முடியாது என தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கொடுக்கப்படும் தேதியை ரத்து மட்டுமே செய்ய முடியும்.

கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

சிலாங்கூர் மற்றும் KLலுக்கு அடுத்து பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் விரைவில் AstraZeneca COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தன்னார்வ முறையில் பதிந்து கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் பதிவு நடவடிக்கையில் இணைய வசதி இல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.

“Going forward in designing the further roll out of the AstraZeneca opt in program, we will take into account people who are unable to access the website and we will reach out to our community clinics to ensure that we can offer this on a voluntary basis to people who may not have access.”

இதனிடையே மலேசியா இம்மாதம் மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசி கையிருப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

இந்தியாவில் இருந்து சரக்கு விமானங்கள் மட்டுமே மலேசியாவுக்குள் நுழைய அனுமதி உண்டு.

பயணிகள் விமானங்களுக்கு அல்ல என போக்குவரத்து அமைச்சு கூறியிருக்கிறது.

Covid-19 பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப அந்நடவடிக்கை அமைகிறது.

தடை அமலில் இருந்தும் சில பயணிகள் விமானங்கள் இந்தியாவில் இருந்து வருவதாகச் செய்திகள் பரவியுள்ளதற்கு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.

கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

பஹாங், குவாந்தான், Taman Tanah Putih Baruவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.

நாளை மறுநாள் 5 ஆம் தேதியில் இருந்து மே 18 ஆம் தேதி வரை அங்கு EMCO அமலில் இருக்கும் என தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கட்டங் கட்டமாகத் தெரியப்படுத்தப்படும்!

Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், நெகிரி செம்பிலானில் மேலும் எட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அப்பள்ளிகள் Rembau, Seremban, Tampin, Port Dickson ஆகிய மாவட்டங்களில் உள்ளவை என மாநில அரசு தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather