Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஈராயரத்துக்குக் குறைந்தது Covid-19!

Jan 13, 2021


 

நாட்டில் இன்று Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் ஈராயிரத்துக்குக் குறைந்துள்ளது.

புதிதாக ஈராயிரத்து 983 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் ஆக அதிகமாக 42 ஆயிரம் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

994 பேர் அத்தொற்றாலிருந்து மீண்டுள்ளனர்.

நான்கு புதிய மரணங்கள் பதிவாகி, மரண எண்ணிக்கை 563ஆக உயர்ந்துள்ளது.

_____

தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் Datuk Zahidi Zainul Abidin-னுக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Zahidi அத்தொற்றுக்கு ஆளான நான்காவது அமைச்சரவை உறுப்பினராவார்.

______

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களை மீறியதற்காக, நேற்று மட்டும் நாடு முழுவதும் காவல் துறை 253 பேரைக் கைது செய்துள்ளது.

அவர்களில் 252 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு, ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.

_____

இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஒட்டி, நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என Putrajaya காவல் துறை பொது மக்களை எச்சரித்துள்ளது!

முதல் இரு நாட்களுக்கு SOPக்களை மீறுவோருக்கு ஆலோசனை வழங்கப்படும்;

அதன் பின்னர் அதே தவரை செய்பவர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.

_____

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 2.0 அமுலுக்கு வந்த ஆறு மாநிலங்களில் முதல் நாளான இன்று மட்டும் உணவு விநியோகம் 80 விழுக்காடு சரிந்துள்ளது!

தங்களின் கீழுள்ள 4 ஆயிரத்து 200 உணவகங்களும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாக மலேசிய முஸ்லீம் உணவக நடத்தினர்கள் சங்கம் PRESMAவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பலர் தங்களின் வருமானத்தை இழந்திருப்பதாகக் கூறிய அவர், அரசாங்கம் உணவகங்களுக்கு தளர்வு வழங்குவதை பரிசிலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

குறிப்பிட்டோர் மட்டும் ஒரு மேஜையில் அமர்ந்து உணவு உண்ணுவதை அனுமதிப்பதோடு, உணவக செயல்பட்டு நேரத்தை அதிகரிக்கவும் அனுமதி கொடுக்குமாறு அவர் மேலும் சொன்னார்.

_____

தேசிய பரிவு மிக்க உதவித் திட்டம் BPN 2.0வின் இரண்டாம் கட்ட விநியோகம் இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது!

அந்த இரண்டாம் கட்ட உதவித் திட்டம் ஏற்கனவே உள்ள ஒரு கோடியே 60 ஆயிரம் பேரையும், புதிதாக விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட 4 லட்சத்து 60 ஆயிரம் பேரையும் உட்படுத்தியிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

இந்த BPN 2.0வுக்காக 2.38 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather