Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நெகிழிப் பயன்பாடு இனி இருக்காது!

Nov 20, 2020


நாட்டிலுள்ள அனைத்து வணிகத் தளங்களிலும் இனி நெகிழிப் பயன்பாடு இருக்காது!

அந்த இயக்கத்திற்கு அனைத்து மாநில அரசாங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாக, சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சு கூறியிருக்கின்றது.

அந்த இயக்கம் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்

முதல் கட்டமாக, பேரங்காடிகள், பலசரக்கு கடைகள், துரித உணவகங்கள், எண்ணெய் நிலையங்களில் உள்ள கடைகள், மருந்தகங்கள் ஆகியவற்றை உட்படுத்தி, அடுத்த மாதம் அந்த இயக்கம் தொடங்கும்.

பின்னர், 2022ஆம் ஆண்டு மளிகைக் கடைகள், இரவுச் சந்தைகள் ஆகிய இதர வணிக நடவடிக்கைகளுக்கும் அந்த இயக்கம் விரிவுப்படுத்தப்படும் என அமைச்சு கூறியது.

அந்த இயக்கத்தின் கீழ், வணிகத் தளங்களில் நெகிழி தேவைப்படும் வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு நெகிழிக்கும் தலா 20 சென் செலுத்தியாக வேண்டும்.

நடப்பில் கிள்ளான் பள்ளத்தாக்கில் நெகிழிப் பயன்பாடு அற்ற முறை அமுலில் இருக்கின்றது.

பினாங்கில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் நெகிழி பயன்பாடு அற்ற நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

BPN 2.0

BPN 2.0 தேசிய பரிவுமிக்க உதவி நிதி திட்டத்தின் கீழ் இதுவரை ஏறக்குறைய 10 மில்லியன் பேருக்கு, முதல் கட்டமாக மொத்தமாக 4.5 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2ஆம் கட்ட தொகை மற்றும், புதிதாக விண்ணப்பம் செய்தவர்கள், மேல்முறையீடு செய்தவர்களுக்கு, அடுத்தாண்டு ஜனவரியில் அத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மலேசியர்களின் கவலை! ஆய்வில் தகவல்!

COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கும் மத்தியில், நாடு சரியான தடத்தில் தான் சென்றுக் கொண்டிருப்பதாக, பத்தில் ஆறு மலேசியர்கள் கருதுகின்றனர்.

Ipsos வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் அது தெரிய வந்துள்ளது.

மற்ற நாடுகளிலுள்ள மக்களைக் காட்டிலும், கொரோனா வைரஸ் பரவல்  குறித்து மலேசியர்கள் அதிக கவலையுடன் இருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் முறையே 66 மற்றும் 46 விழுக்காட்டினர் மட்டுமே COVID-19 குறித்து கவலைப்படும் நிலையில்மலேசியாவில் அவ்விகிதம் 77 விழுக்காடாக இருக்கின்றது.

 

மேலும் 4 clsuter-கள்!

நாட்டில் மேலும் 4 புதிய COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் இரண்டு clusterகள் கிள்ளான் பள்ளத்தாக்கிலும், 2 பேராக் மற்றும் ஜொகூரிலும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

ஆகக் கடைசியாக ஆயிரத்து 290 பேர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேளை, 838 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இன்னும் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

அதிகமான தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

நாட்டில் இதுவரை ஏறக்குறைய 9 ஆயிரத்திற்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள், MySejahtera செயலி வழி அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை, அத்தொற்றுப் பீடித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கண்டுப்பிடிக்கப்பட்டவை.

மேலும் சிலர், அச்செயலி வழி தங்களது உடல் ஆரோக்கியத்தை சுய மதிப்பீடுச் செய்துக் கொண்ட போது, அத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Petaling Jayaவிலுள்ள பேரங்காடி ஒன்றில் உருவான COVID-19 clusterருடன் தொடர்புடைய  ஏறக்குறைய 200 சம்பவங்களை கண்டுப்பிடிக்கவும், MySejahtera செயலி உதவியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather