Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தடுப்பூசி - பிப்ரவரி 21 மலேசியாவுக்கு கிடைக்கும்!

Feb 16, 2021


COVID-19 தடுப்பூசியை மலேசியா இம்மாதம் 21ஆம் தேதி பெறும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், COVID-19 தேசிய தடுப்பூசித் திட்டத்திற்கான வழிக்காட்டி நூலை வெளியிட்ட போது Tan Sri Muhyiddin Yassin அத்தகவலை பகிர்ந்துக் கொண்டார்.

"Di sini dengan sukacitanya saya memaklumkan bahawa vaksin Pfizer BioNTech akan sampai di Malaysia pada 21 Februari, 2021. Selanjutnya roll-out pelaksanaan Program Imunisasi Covid-19 Kebangsaan akan bermula pada 26 Februari, 2021 di mana saya sendiri akan menerima suntikan vaksin pada hari tersebut bersama-sama petugas barisan hadapan"  

இத்தடுப்பூசி திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும்;

முதல் கட்டமாக, பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

2ஆம் கட்டமாக ஏப்ரல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை, அத்தொற்றுக்கான  ஆபத்து அதிகம் உள்ள தரப்பினருக்கு தடுப்பூசி போடப்படும்.

மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களை உட்படுத்தியிருக்கும்.

அவர்களுக்கு இவ்வாண்டு மே தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி வரை கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

சமுதாயத்தில் COVID-19 தொற்றுக்கு எதிராக, கூட்டு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி, அதன் வாயிலாக COVID-19 பெருந்தொற்றை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வருவதே இப்பேரளவிலான தடுப்பூசித் திட்டத்தின் நோக்கம் என்றும் பிரதமர் கூறினார்.

எனவே, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதோடு, நம்மைச் சார்ந்தவர்களையும் அத்தொற்றில் இருந்து பாதுகாக்க இத்தடுப்பூசி திட்டம் அவசியமாவதாக Tan Sri Muhyiddin சொன்னார்.

இத்திட்டம் வெற்றிப் பெற்றால், பெரும் சவாலில் இருந்து மீண்டு நாட்டில் பல மாற்றங்களையும், பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்களையும் காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"Pelbagai sektor ekonomi akan dibuka semula, seperti pelancongan, kita boleh saling ziarah-menziarahi, aktiviti sukan juga kita boleh amalkan, tetapi dengan mengamalkan norma baru, inilah yang saya katakan, apabila saya maksudkan bahawa vaksin COVID-19 adalah antara sinar harapan yang paling utama kita untuk kita menang dalam perang lawan COVID-19 ini" 

எனவே, இத்தடுப்பூசி திட்டம் குறித்து யாரும் மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என்றும் Tan Sri Muhyiddin வலியுறுத்தினார்.

தடுப்பூசி திட்டத்திற்கு பதிந்துக் கொள்வது, குறிக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்வது போன்றவற்றில் அனைவரும் அக்கறையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொது மக்கள்,  www.vaksincovid.gov.my என்ற இணைய அகப்பக்கம் வாயிலாக இத்தடுப்பூசி திட்டம் பற்றிய விரிவான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather