
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது!
இப்போதைக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என, உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவீன அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.
மத்தியக்கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்ட சூழலுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை போக்க அவ்வமைச்சு அந்த விளக்கத்தைக் கொடுத்தது.
------
இதனிடையே, மத்தியக்கிழக்கு நாடுகளில் நிலவி வரும் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்களை எதிர்கொள்ள மலேசியா தயாராக வேண்டும்!
அதற்கு வேண்டிய அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருவதாக, தேசிய பாதுகாப்பு மன்றம் கூறியது.
அதன் தொடர்பில் கலந்து பேச, அம்மன்றம் பிரதமர் தலைமையிலான கூட்டம் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறது.
-----
மற்றொரு பக்கம் நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிச் செய்ய விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது!
கையிருப்பு நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், வேளாண்-உணவு மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் வெளிப்புறக் காரணிகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என அவ்வமைச்சு கூறியது.
------
மலாக்காவில், UV எனப்படும் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வெப்ப அளவு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கின்றது!
இதையடுத்து அம்மாநில மக்கள் வெளிநடவடிக்கைகளிக் குறைத்துக் கொள்ளும்படி, மாநில சுகாதார துறை வலியுறுத்தியிருக்கிறது.
வெகு நேரம் UV கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தில் இருப்பது, தோல் மற்றும் கண் நோய் உட்பட, பல்வேறு சுகாதாரச் சிக்கல்களைக் கொண்டு வரும் என அத்துறை எச்சரித்தது.
------
Kuala Lumpur மாநகர் மன்றத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள சாலை ஒன்றில், மரம் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, நஷ்ட ஈடாக அவரது பெற்றோருக்கு DBKL கிட்டத்தட்ட எட்டரை லட்சம் ரிங்கிட் கொடுக்க வேண்டும்.
கண்காணித்து பராமரிப்பதில் DBKL கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி Sessions நீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.