
இனிப்புப் பண்டங்கள் எனக் கூறி பள்ளிகள் போதை பொருள் விநியோகிக்கப்படுவதாக பரவி வரும் தகவலை அரச மலேசிய காவல் படை திட்டவட்டமாக மறுத்துள்ளது!
இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் நாடளாவிய அளவில் நடத்தப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கைக்குப் பின்னர், மூக ஊடகங்களில் பரவி வரும் அத்தகவல் உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அது கூறியது.
இதே வதந்தி கடந்தாண்டு தொடக்கத்திலும் பரவியதாக PDRM சொன்னது.
-------
நாட்டில் போதை பொருள் தொடர்புடைய குற்றங்கள் உயர்ந்து வருகின்றன!
2023 முதல் கடந்தாண்டு வரை அம்மாதிரியான இரண்டரை லட்சம் குற்றச்செயல்கள் பதிவுச் செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தெரிவித்தது.
------
சிலாங்கூர், கிள்ளானில் மது போதை மற்றும் போதை பொருள் உட்கொண்டிருந்த கார் ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்!
சில வாகனங்களை முந்தி வந்த அந்த கார் எதிர்திசையில் சென்ற நிலையில், அது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதாகக் காவல் துறை தெரிவித்தது.
------
வெப்பத்தை எதிர்கொள்ள மாணவர்களுக்குப் போதுமான தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தரும்படி, திரங்காணுவில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
------
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், பேராவில் அதீத வெப்பத்தால் 700க்கும் மேற்பட்ட திறந்த வெளி தீச்சம்பவங்கள் பதிவானதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
----
சிலாங்கூர், Shah Alamமில் ஓடிக் கொண்டிருந்த காரில் பட்டாசு வெடித்து சாகசம் செய்த இருவரைக் காவல் துறை கைது செய்துள்ளது!
அதன் தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தது.