
நாட்டில் குறிப்பாக, சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டத்திலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!
குழந்தைகள் முதியோர், நாள்பட்ட நோயுடையவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என IMU பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார நிபுணர் Prof. Datuk Dr. Syed Mohamed Aljunid Syed Junid, Astro Awaniயிடம் கூறியிருக்கிறார்.
காற்றின் தரம் மோசமாக இருக்கும் இடங்களில் வசிப்பபவர்கள் வெளிநடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
வெளியே சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், சுவாசக் கவசம் அணிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
------
இதனிடையே சரவாக் மக்கள் இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் மோசமான புகைமூட்டத்தை எதிர்கொள்ளலாம்!
இந்தோனேசியாவின் கலிமந்தானில் தீ அணைக்கப்படாத வரையிலும், தென்மேற்குக் காற்று தொடர்ந்து வீசும் வரையிலும் இந்நிலை நீடிக்கும் என, MetMalaysia எதிர்ப்பார்க்கிறது.
மலேசியாவில் மழை பெய்வது, தற்காலிகமாக புகைமூட்ட தாக்கத்தை குறைக்குமே ஒழிய, நிலைமையை சரிச்செய்துவிடாது என அத்துறை கூறியது.
-----
இதனிடையே, சினபுங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, வடக்கு சுமத்ராவின் கரோ பகுதியில் உள்ள அல்லது அங்கு பயணம் செய்யும் மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மேடனில் உள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.
-----
மூவாயிரம் P hailing ஓட்டுனர்களின் மோட்டார்சைக்கிள் நிதிச் சுமையைக் குறைக்க, புதிய பராமரிப்பு உதவித் தொகையை வழங்க முடிவெடுத்துள்ளது மலாக்கா மாநில அரசு!
அந்த ஒதுக்கீடு இவ்வாரம் நடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.
அதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டறைகளில் மோட்டார்சைக்கிள் பராமரிப்பை மேற்கொள்ளும் அம்மாநில P hailing ஓட்டுனர்களுக்கு 20 முதல் 30 விழுக்காட்டு கழிவு வழங்கப்படும்.
------
சிலாங்கூர் Bestari Jayaவில், மின்விளக்குக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருந்த போது 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.