Skip to main content
புடி95 200 லிட்டராகக் மறுசீரமைக்கப்படுகிறது!

Budi95 திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கான மாதாந்திர பெட்ரோல் ஒதுக்கீடு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் மறுசீரமைக்கப்படுகிறது! 

உதவித் தொகை வழங்கப்பட்ட ரோன்95 ரக பெட்ரோல் விலையோ லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக நிலைநிறுத்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். 

ஏப்ரல் ஒன்று முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருகிறது. 

உலகின் நடப்பு பொருளாதார சூழலையும், சராசரி மலேசியர்களின் மாதாந்திர பெட்ரோல் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெர்வித்தார். 

தகுதிப் பெற்ற e hailing ஓட்டுனர்களுக்கான மாதத்திற்கு 800 லிட்டர் ஒதுக்கீடும் நிலைநிறுத்தப்படுகிறது. 

- 

E hailing ஓட்டுனர்களுக்கு Gig தொழிலாளர்களுக்குமான மாதாந்திர அதிக பட்ச பெட்ரோல் ஒதுக்கீட்டை 800 லிட்டராக நிலைநிறுத்திய அரசாங்கத்தின் முடிவு வரவேற்கத்தக்கது! 

இது செயல்பாட்டு செலவீனங்களைக் கட்டுப்படுத்த துணை புரியும் என, மலேசிய e hailing கூட்டணி கருதுகிறது. 

இதனால் e hailing சேவைக்கான தேவையும் அதிகரிக்கும் என அது கூறியது. 

----- 

இதனிடையே வாகனமோட்டும் உரிமம் காலாவதியாக 36 மாதங்கள் ஆவோர் BUDI95 பெட்ரோல் உதவித் திட்டத்திற்குத் தகுதி பெறமாட்டார்கள்! 

சாலை போக்குவரத்துத் துறை அதனை தெளிவுப்படுத்தியிருக்கிறது. 

அந்த உதவித் தொகையைப் பெற நினைப்பவர்கள் தங்களின் உரிமத்தை நிச்சயம் புதுப்பித்துக் கொள்ளுமாறு அது நினைவூட்டியது. 

------

எரிபொருளின் விலை உயர்வுக்கு மத்தியில், செலவீனங்களைக் கட்டுப்படுத்த அறிமுகம் காணவுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் கட்டங்கட்டமாக அமுலுக்கு வரும்! 

தனியார் துறைகளும் முடிந்தளவு அதனைப் பின்பற்ற வேண்டும் என, பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 

-----

சிறை வாசம் அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் DS Najib Razak, அரச மன்னிப்புக்குக் கோரி புதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்திருப்பதாகக் கூறப்படுவதை அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளார். 

RAAGA Aaha Siranta Isai!