
வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு RON95 பெட்ரோல் வாங்கும், விற்கும் தடை, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், இறுதி கட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன !
இதுவரை, பெட்ரோல் நிலைய நடத்துநர்கள் தான் தண்டனைக்குள்ளாகினர் ;
ஆனால் இனிமேல், வெளிநாட்டு வாகன ஓட்டுநரும், வாகன உரிமையாளரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என உள்நாட்டு, வாணிப, வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விரிவாக்கப்பட்ட அமலாக்கம், குறிப்பாக எல்லைப் பகுதிகளில், உதவித் தொகை பெற்ற எரிபொருள், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் மற்றும் கசிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
----------
மற்றொரு நிலவரத்தில், நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் போதுமானதாக உள்ளதாக, மலேசிய பெட்ரோல் நிலைய நடத்துநர் சங்கம் தெரிவித்துள்ளது !
உலக சந்தையில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, சில நாடுகளில் அதன் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதால், மக்களிடையே எழுந்த பயத்தை போக்க, அச்சங்கம் அவ்வாறு கூறியது.
எனினும், மலேசியாவில் எரிபொருள் விநியோகம் தடையின்றி, தொழில்நுட்ப சிக்கல்கள் இல்லாமல் இருந்து வருவதாக அது சொன்னது.
---------
நாட்டில் கடும் வெப்பநிலை நீடித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார் !
இந்த வெப்பம், ஜூன் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டதை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார்.
---------
இதனிடையே, வெப்ப காலத்தில் வரும் அவசர அழைப்புகளில், 60 விழுக்காடு வரை, காடு, தோட்டம் போன்ற பகுதிகளில் நடைபெறும் திறந்தவெளி எரிப்பு சம்பவங்களாகும் !
தீயணைப்புத் துறை அந்த தகவலை வெளியிட்டுள்ளது.
----------
இவ்வேளையில், கெடாவில், பெண்டாங், சிக், போகொக் செனா, மற்றும் கோத்தா செதாரிலும், ஒட்டுமொத்த பெர்லிசிலும், 2-ஆம் கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !